மலையாள ரீமேக்கில் நடிப்பது குறித்து ரஜினி தரப்பு மறுப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்திலும், சங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில் இப்படங்களை அடுத்து அவர் சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்தது. இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பு வதந்தி என தற்போது கூறியுள்ளது. ‘இப்போதைக்கு ரஜினிகாந்த் கபாலி மற்றும் ‘2.0’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த படங்களைத் தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே ரஜினியின் அடுத்த படம் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்’ என்று ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது


![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIORTxbnxP8cH58nhlqZnUIxxDZb0xjbFJbA94GWDlZVnCDW6JyRHiAoZSfULZ9sNBpM21JUHlDDsypz5cSRRww-bRP45Sl3iFgvU5KzJqBPCu7mO84RjID2YRjjl6oNW-Y8AJWiEK8vNS/s320/rajini.jpg)
Post a Comment