P.V. Sindhu
A+ A-

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி



கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை போர்னிப்பிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரி கோல்டு பேட்மிண்டன் போட்டி குவாங்சூவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 17-21, 19-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை போர்னிப்பிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 11-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் லூ யிங்-லூ யு இணையிடம் தோல்வியை தழுவியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் 10-21, 15-21 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் லாங்கிடம் வீழ்ந்தார். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 

P.V. Sindhu

Related Post

டிவில்லியர்ஸ் 43 பந்துகளில் சதம் அடித்து, ஐ.பி.எல். போட்டியில் 5வது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.

2016/05/15

  ஐ.பி.எல். போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...

கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை போர்னிப்பிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.