WEATHER FORECAST
A+ A-

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்

 
சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பாம்பன் - நாகப்பட்டினம் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும் என்றார். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தார்.

மேலும் பேசிய அவர் தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழையும், வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றார்.

Related Post

சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.