A+ A-

சென்னையில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று இரவு முழுவதும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு அருகே 170 கி.மீ தொலைவில் உள்ளது, அது வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இரவு முழுவதும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இன்று வந்தவாசியில் 5 செ.மீ, திருவள்ளூரில் 4 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related Post

சென்னையில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.