சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud - மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.
சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,
கண்டுபிடிப்புகள்,

- உணர்வு மனம் (Conscious Mind)
- உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
- தொலை நோக்கு மனம்
- உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
- முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
- மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.
கருத்துகள்,
- சிக்மண்ட் பிராய்ட்,’மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்’ என்று கருதினார்.
- பிராய்டு முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது என்று விளக்கினார்.
Post a Comment