A+ A-

கறி பிரியாணி செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Kari Biriyani :

கறி பிரியாணி செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Kari Biriyani :


கறி பிரியாணி :

தேவையானவை:


1. பிரியாணி அரிசி -1 கிலோ

2. கறி -250 கிராம்

3. இஞ்சி -3 அங்குலம்

4. தேங்காய் -1/2 முடி பால் எடுப்பத்தற்கு

5. பூண்டு -1

6. நெய்யில் வறுத்த பட்டை -1 அங்குலம்

7. கிரம்பு -6

8. கொத்தமல்லி –2 ஸ்பூன் (வறுத்தது)

9. புதினா, கொத்தமல்லி இலை –சிறிதளவு

10. பல்லாரி -2

11. மிளகாய் -6

12. ஏலக்காய் -6

13. பெருஞ்சீரகம் -1 ஸ்பூன்




செய்முறை:


1. அரிசியை சுத்த்ம் செய்து வடிகட்டி வைக்கவும்.பிரஸர் குக்கரில் வெட்டிய கறி துண்டுகளை உப்பு,மஞ்சள் நீர் சேர்த்து வேக வைக்கவும்.

2. வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரிந்த வெங்காயம் புதினா,மல்லி தழை சேர்த்து வதக்கவும்.

3. அரைத்த மசால், அவித்த கறி,அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.

4. குக்கரில் கறி வெந்த தண்ணில் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும்.

5. கொதிக்கும் தேங்காய்ப் பாலில் வதக்கிய மசால் அரிசி,கறி உப்பு சேர்த்துக் கிளறி விட்டு குக்கரை 10 நிமிடத்தில் இறக்கவும்.