அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான செல்வி ஜெயலலிதா இன்று வியாழக்கிழமை மே 16 சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பெருந்துறை தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், பெரியார் பிறந்த மாவட்டத்தில் வெளியிடுவதால் சந்தோஷமாக இருக்கிறது என்றார். முதல் பிரதிகள் இளம் கட்சி தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையை கடைசியாக வெளியிட்டுள்ளது. ஏனைய அரசியல் கட்சிகள் தமது வாக்குறுதிளின் அடிப்படையில் பிரச்சாரம் வருகிறது ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பேச்சு தமது அரசாங்கம் செய்தது பற்றி மட்டுமே அமைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டிற்கும் தனித்தனியே தேர்தலக்றிகை அறிவிக்கப்பட்டது.
அறிக்கை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:
- அனைத்து விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதி
- விவசாயக் கடன் ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு 2016 முதல் 21 வரை
- மீனவர்கள் உதவித்தொகை ரூ 5000 உயர்த்தப்படும்
- சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதியில்லை
- 10 வது மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய இலவச மடிக்கணினிகள்.
- மகப்பேறு உதவி. ரூ 18,000
- மின்சாரம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் 100 யூனிட்ஸ் இலவசம்.
- மீனவர்கள் நிவாரணத்தொகை ரூ5000 உயர்த்தப்படும்.
- மீனவர்களுக்கு தனி வீடுகள்.
- கூட்டுறவு வங்கி கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- பெண்கள் ஸ்கூட்டி வாங்க 50% மானியம்
- பெண்களுக்கு ஹெல்த் செக்கப் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு செய்யப்படும்.
- டடையில்லா மின்சாரம் உறுதி.
- அனைத்து அரசு சேவைகளை பெற ஏழை மக்களுக்கு அம்மா வங்கி அட்டை.
- புதிய கிரானைட் கொள்கை, லோக் அயுக்தா அமல்.
- ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரூ500 கோ-ஆப்டெக்ஸ் கூப்பன்கள் .
- 10 லட்சம் வீடுகள் பல்வேறு வீட்டு திட்டங்கள் மூலம்.
- திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம்
- அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு இலவச செல்போன்.
- மாநில அரசு. ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் படி ஊதியம்.
- கோவில்களுக்கு ரூ. 1 லட்சம்.
- ஆவின் பால் லிட்டருக்கு ரூ 25.
- கல்வி கடன் தள்ளுபடி.
- அம்மா வங்கி அட்டை நிதி சேவைகளை மேம்படுத்த - வட்டி இல்லாத கடன் மற்றும் அரசாங்க நலத்திட்டங்களை பெற.
- பொது இடங்களில் இலவச வைஃஃபை சேவை.
- சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு.
- பெண்களுக்கு ஓட்டுநர் பயிர்ச்சி, ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும்
- பழைய அரசு ஓய்வூதியத் திட்டம் தொடரும்.
- அரசு வீட்டுவசதி கடன், ரூ. 40 லட்சம் வரை
- வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களின் கல்வி கடன் அரசு மூலம் வழங்கப்படும்.
Post a Comment