பேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக நாம் அனுப்பும் மெசேஜை, நாம் அனுப்பியவரை தவிர வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது.
வாட்ஸ் அப் நிறுவனம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்இல் கால் பேக் (‘call back) ஆப்சன் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் நண்பர்கள் யாராவது வாட்ஸ் அப்பில் கால் செய்து மிஸ்டு காலாக இருந்தால், வாட்ஸ் அப் செல்லாமலேயே கால் பேக் (call back) ஆப்சன் மூலமாக கால் செய்யலாம். இதே போல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்இல் வாய்ஸ் மெய்ல்(voicemail) வசதியையும் வாட்ஸ் அப் கொணடுவரவுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் போனை எடுக்காவிட்டால் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தியை பதவு செய்து அனுப்பலாம். இதேபோல் ஜிப் பைல் சேரிங் ஆப்சனை வாஸ்ட் அப் கொண்டுரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுப்பிய மற்றும் வந்த பிடிஎப் பைல்களான Docs, Sheets, and Slides files, உள்ளிட்டவற்றை ஜிப் பைலாக மாற்றி அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் கொண்டுவரவுள்ளது.
Post a Comment