அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளராவது உறுதியான நிலையில், ''அமெரிக்காவுக்குள் வருவதற்கு, முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்படும்; முறையான அனுமதியில்லாதவர்கள் நாடு கடத்தப்படுவர்,'' என, டொனால்டு டிரம்ப், மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தல் நடந்து வருகிறது. குடியரசு கட்சியில், துவக்கம் முதல், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன், அரசியலில் நுழைந்த இவர், ''முஸ்லிம்களை அனுமதிக்க மாட்டோம்; முறையான அனுமதியில்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்போர் நாடு கடத்தப்படுவர்,'' என, கூறி வந்தார்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளர் தேர்தலில், அவரை எதிர்த்து போட்டியிட்ட டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகுவதாக, இரு நாட்களுக்கு முன் அறிவித்தார். அதையடுத்து, டிரம்ப் அதிபர் வேட்பாளராவது உறுதியானது.
நேற்று முன்தினம், 'டிவி'க்கு அளித்த பேட்டியிலும், 'அமெரிக்காவில் முஸ்லிம்களை அனுமதிக்க மாட்டோம்; முறையான அனுமதியில்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், அவர்களுடைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர்' என, டிரம்ப் உறுதியாக கூறியுள்ளார். இதற்கு ஜனநாயக கட்சியில், அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள, ஹிலாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
Post a Comment