A+ A-

மட்டன் சுக்கா செய்வது எப்படி, How to made mutton sukka, in tamil

How to made Mutton sukka? Mutton sukka in tamil :


 மட்டன் சுக்கா - Mutton sukka :

  1. மட்டன் - 250 கிராம்(சிறு துண்டுகளாக)
  2. வெங்காயம் - 4துண்டுகள்
  3. தக்காளி - 2 எண்கள்.
  4. மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  6. மல்லி தூள் - 4 தேக்கரண்டி.
  7. புதினா இலைகள் - 1 கொத்து.
  8. எண்ணெய் - 150 கிராம்.
  9. வறுத்த கடலை - 2 தேக்கரண்டி
  10. சோம்பு - 1 தேக்கரண்டி
  11. சீரகம் - 2 தேக்கரண்டி
  12. கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி.

தயார் செய்தல் :

  • வெங்காயம், தக்காளி சிறு துண்டுகளாக வெட்டவும்.
  • புதினா இலைகள் அகற்றி, கழுவி வைக்கவும்.
  • மட்டனை கழுவி வைக்கவும்.
  • சோம்பு, சீரகம் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும்.
  • வருத்த கடலையை தனியாக தூளாக்கவும்.
  
செய்முறை:

  1. ஒரு பிரஷர் குக்கரில், எண்ணெய் ஊற்றி சுடு செய்யவும்.
  2. வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
  3. அது மென்மையாக மாறும் போது, மட்டன் துண்டுகள் சேர்க்கவும்.
  4. வறுக்கவும். மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. உப்பு ஒரு ஸ்பூன் மற்றும் புதினா சேர்க்கவும்.
  6. போதுமான தண்ணீர் சேர்க்கவும்.
  7. 3 விசில் வரை காத்திருக்கவும்.
  8. ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  9. கிரேவி சேர்த்து உலர வைக்கவும்.
  10. நீர் முற்றிலும் வற்றும் போது, பச்சை மிளகாய், தூள் சோம்பு, சீரகம் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். பின்னர் பருப்பு சேர்க்க.
  11. மட்டன் சுக்கா தயாராக உள்ளது. சாம்பார் சாதம், ரசம் சாதம் அல்லது நாண் மற்றும் ரொட்டி கொண்டு சூடாக பரிமாறவும்.