A+ A-

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | how to make chicken manjurian :

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | how to make chicken manjurian :

சிக்கன் மஞ்சூரியன் :


 

தேவையானவை :

  1. எலும்பு நீக்கிய ஒரு அங்குலம் நீளமான வெட்டிய கோழி துண்டுகள்- 450 கிராம்
  2. மைதா மாவு – 115 கிராம்
  3. பேக்கிங்க் பவுடர் – 1 டீஸ்பூன்
  4. மிளகு தூள் – ½ டீஸ்பூன்
  5. கார்ன் ப்ளவர் – 50 கிராம்
  6. முட்டை – 1
  7. உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை சிரிது தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொண்டு அதில் கறிதுண்டுகளை ஒவ்வொன்றாக தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும்.
  • ஒரு வானலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய30 கிராம் வெங்காயம், 75 கிராம் மிளகாய், 50 கிராம் பூண்டு, 30 கிராம் கொடை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் 1 டீஸ்பூன் சோயாசாஸ், ¼ டீஸ்பூன் வினிகர், ½ டீஸ்பூன் அஜினா மோட்டா சால்ட் சேர்த்து சிறிது ஸ்டோக் ஊற்றி தேவையன அளவு உப்பும், 1 டீஸ்பூன் கார்ன் ப்ளவரும் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • எல்லாம் சேர்ந்து கட்டியாக வந்த பின் தனியாக பொரித்து வைத்திருக்கும் கறி துண்டுகளை அதனுடன் கலக்கவும்.
  • சூடான சிக்கன் மஞ்சூரியன் தயார் பரிமாறவும் .