A+ A-

ஆன்மிக சிந்தனைகள் - 03ஏப்ரல்,2016,

விவேகானந்தர்

  • வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் போராடும் வீரனைப் போல செயல்படுங்கள்.
  • அறிவு மனிதனிடம் இயல்பாகவே வெளிப்பட வேண்டும். இரவலாக அதை யாரிடமும் பெற முடியாது.
  • சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சிக்கு வழிவகுப்பதில்லை.
  • தன்னம்பிக்கையை இழப்பது என்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதை விட மோசமானது.
  • ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

காந்திஜி

  • மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதி வந்தால், விலை மதிப்பில்லாத எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும்.
  • நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை.
  • உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள்.

நபிகள் நாயகம்

  • பிறருடைய பொருளை பொய் சாட்சியம் கூறி அபகரிப்பவனை சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமுடியாத படி அல்லாஹ் தடுத்து விடுவான்.
  • மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.
  • நீங்கள் எவர்களுடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ, அவர்களுடனே நாளை மறுமையிலும் சேர்ந்து இருப்பீர்கள்.
  • உன் நாவை அடக்கி வைத்துக் கொள். உன் வீட்டை, விருந்தினர் வரும் தலமாக ஆக்கிக் கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணி கண்ணீரைச் சிந்து. உன் வாழ்வில் வெற்றி பெறுவாய்.
  • இவ்வுலக வாழ்வில் மதி மயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.
  • எவன் பேசும்போது கோபம் கொண்டானோ, அவன் நம்மைச் சேர்ந்தவன் அல்ல.

பைபிள்

  • உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும். உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. 
  • நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது.
  • நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன. 
  • நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.

indian philosophers, divine being, hindu philosophy, religion philosophy, spiritual philosophers, hindu philosophers, adi sankarar, sathya sai, vivekanandar, bharathiyar, mata amirtanandamayi, saradha devi, ramakrishna paramahamsar, kabir, sri annai, kirubananda vaariyaar, sri aravindar, gandhiji, rabindranath tagore, thiruvalluvar, muralidara swamiji, dayananda saraswathi, ramanar, ramanujar, vyasar, rajaji, kamalathmanandar