Showing posts with label சூப். Show all posts


தேவையான பொருட்கள் : 

  1. வெண்ணெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்,
  2. சிவப்பு மிளகாய் - 1/4 கப்,
  3. கோஸ் - 1/4 கப்,
  4. பீன்ஸ் -1/4 கப்,
  5. கேரட் - 1/4 கப் ( காய்கள் அனைத்தும் பொடியாக நறுக்கியது),
  6. துருவிய நூல்கோல் - 1/2 கப்,
  7. பேபிகார்ன் - 1/4 கப்,
  8. பீர்க்கங்காய் - 2 கப் (பொடியாக நறுக்கியது),
  9. வெங்காயத்தாள் - 1 கப் (நறுக்கியது).
  10.  தண்ணீர் - 2 கப்,
  11. சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்,
  12. சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
  13. மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
  14. வினிகர் - 1/4 கப்,
  15. உப்பு - தேவையான அளவு,
  16. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் (அல்லது சிவப்பு மிளகாய் விழுதையும் சேர்க்கலாம்).

செய்முறை :

  • கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சுட வைத்து காய்கறிகளை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
  • பின் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு காய்கறிகள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து நறுக்கிய வெங்காயத்தாளுடன் பரிமாறவும்.

மக்காரோனி சூப் - Macaronic Soup

 தேவையான பொருட்கள் :

மேக்ரோனி - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்த சோளமுத்து - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன் (அரிந்தது),
வெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு,
சர்க்கரை - தேவையான அளவு,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 1,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை :

மேக்ரோனியை தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பாலில் வெண்ணெய் விட்டு சோள மாவை போட்டு குறைந்த தணலில் 2 நிமிடம் வறுக்கவும். தக்காளி, கேரட், வெங்காயத்தாளை நீர்விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடிகட்டி ஸ்டாக் தயாரித்துக் கொள்ளவும். வறுத்த சோள மாவில் ஸ்டாக் (காய்கறி வெந்த நீர்) சிறிது ஊற்றி பேஸ்ட் போலத் தயாரிக்கவும். வெந்த மேக்ரோனி, உப்பு, சர்க்கரை, சோள மாவு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் ஸ்டாக்குடன் சேர்த்து மீண்டும் சூடாக்கவும். வெந்த சோள முத்தை தூவி சூடாகப் பரிமாறவும்.

லென்ட்டில் - லீக்ஸ் சூப் | Lendl - Leagues soup

தேவையான பொருட்கள் : 

  1. பயத்தம்பருப்பு - 1 கப்,
  2. எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
  3. உப்பு - தேவையான அளவு,
  4. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கப் (அரைத்தது),
  5. பொடியாக நறுக்கிய லீக்ஸ் - 1 கப்,
  6. காய்கறி வெந்த தண்ணீர் - 1 கப்,
  7. தேங்காய்ப்பால் - 1/2 கப்,
  8. மைதா - 1/2 கப், வெண்ணெய் - சிறிது.


செய்முறை :

  • வெண்ணெயை உருக்கி அதில் மைதாவைச் சேர்த்து வறுக்கவும். 
  • அதன் மேல் லீக்ஸ், அரைத்த கொத்தமல்லி விழுது போடவும். 
  • பின் காய்கறி வெந்த தண்ணீர், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். 
  • இதற்குள் பயத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பின் ஃப்ரெஷர் குக்கரில் தண்ணீர் போட்டு வேக வைக்கவும். 
  • வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, எல்லாம் சேர்ந்த பிறகு, கீழே இறக்கி வைத்துச் சுடச்சுடப் பரிமாறவும். 

பட்டாணி சூப் | Pea Soup

தேவையான பொருட்கள் :

  1. காய்ந்த பட்டாணி - 1 கப்,
  2. கேரட் - 1,
  3. வெங்காயம் - 1,
  4. பிரிஞ்சி இலை - 1/2,
  5. கிராம்பு - 1,
  6. உப்பு - தேவையான அளவு,
  7. மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்,
  8. வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
  9. எண்ணெய் - 1 டீஸ்பூன்.



செய்முறை :

  • காய்ந்த பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். 
  • மறுநாள் ப்ரஷர் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும். 
  • கடாயில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வதக்கவும். 
  • இதில் பொடியாக அரிந்த வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கவும். 
  • மிக்ஸியில் வேக வைத்த பட்டாணி, வதக்கிய கேரட், வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். 
  • தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 
  • இக்கலவையை வடிகட்டி ஒரு கடாயில் போடவும். 
  • உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 
  • பரிமாறும் முன் சிறிது வெண்ணெய் சேர்த்து சூடாக சாப்பிடவும். 

Drumstick Leaves Soup|முருங்கை இலை சூப்

தேவையான பொருட்கள் :

  1. எண்ணெய் / நெய் - 1 தேக்கரண்டி
  2. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  3. பூண்டு - 5
  4. துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  5. வெங்காயம் - 4
  6. தக்காளி - 1
  7. முருங்கை இலை - தேவையான அளவு
  8. தண்ணீர் - தேவையான அளவு
  9. உப்பு, மிளகு - தேவையான அளவு


செய்முறை :

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் சீரகம் சேர்த்து பொரிக்கவும்.
  • அதனுடன் பூண்டு, துருவிய இஞ்சி, சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும். 
  • பின் கொஞ்சம் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும். 
  • உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

SUNBERRY spinach soup with coconut milk|மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்


தேவையான பொருட்கள் :

  1. மனத்தக்காளி கீரை- 1கப்
  2. மனத்தக்காளி விதை-2 ஸ்பூன்
  3. முதல் தேங்காய் பால்- 1கப்
  4. சின்ன வெங்காயம்-6
  5. தக்காளி-1
  6. பூண்டு- 1


செய்முறை :

  • கடாயில் 2டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் வதக்கவும். 
  • லேசாக வதக்கினால் போதும். 
  • வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் சூடாக சாப்பிடலாம்.

MARI themes

Powered by Blogger.