Showing posts with label உலகம். Show all posts

 
வாரன் பபெட்
பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத் தின் தலைவர் வாரன் பபெட் யாகூ நிறுவனத்தை வாங்கும் முயற்சி யில் இருப்பதாகத் தெரிகிறது. யாகூ நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருக்கும் நிறுவனங்களுக்கு வாரன் பபெட் நிதி உதவி செய்ய இருப்பதாக தெரிகிறது.

யாகூ நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே தடுமாறி வருகி றது. அந்த நிறுவனத்தை வாங்க 10-க் கும் மேற்பட்ட நிறுவனங்கள் முயற்சி செய்வதாக ஒரு மாதத்துக்கு முன்பு செய்தி வெளியானதை அடுத்து இப்போது வாரன் பபெட்டும் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் உதவி செய்ய இருக்கும் நிறுவனங்கள் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உள்ளன. ஆனால் நிச்சயம் வாங்கும் என்ப தற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து யாகூ நிறுவனமோ, வாரன் பபெட்டோ கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் யாகூவை வாங்க பத்து நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் அவை அனைத்தும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் ஆகும். கடந்த மாதம் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

யாகூ நிறுவனத்தில் 2000 ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் சுசன் டெகெர், இவர் இப்போது பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருக்கிறார். இவர் தவிர யாகூ நிறுவனத்தின் சில முன்னாள் பணியாளர்கள், இந்த நிதி உதவிக்கு ஆலோசகர்களாக இருப்பதாகவும் தெரிகிறது.



வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

1
 
indo-china
தன்னுடைய அணு ஆயுதத் திறன்களை மேம்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லையருகே தன் படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் உலகின் பல பகுதிகளிலும் சீனா தன் ராணுவ பலத்தை காட்டி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு சீனா பெரும்பாலும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.

இது குறித்து கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு துணை உதவிச் செயலர் ஆபிரகாம் எம்.டென்மார்க் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஆயுதப்படை திறன்களும், படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தங்களது உள்ளார்ந்த நிலைத்தன்மையை பராமரிக்கச் செய்யப்படுகிறது அல்லது எந்த அளவுக்கு அண்டை நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த செய்யப்படுகிறது என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை.

இந்தியாவுடனான அமெரிக்காவின் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும். சீனாவுக்காக அல்ல, இந்தியா தன்னிலே இந்த விவகாரங்களில் ஒரு முக்கிய நாடாக திகழ்கிறது. எனவே இந்தியாவுடன் அதன் மதிப்புக்காக நாங்கள் கூடுதலாக உறவுகளை வலுப்படுத்தவிருக்கிறோம்” என்றார்.

சீனா-இந்தியா எல்லை விவகாரம் பற்றி பெண்டகன் அறிக்கையில் கூறும்போது, “இந்திய-சீன எல்லைப்பகுதியில் குறிப்பாக பிரச்சினைகள் உள்ள எல்லை பகுதியில் இருதரப்பினரும் ஆயுதப்படையுடன் வலம் வருகின்றனர். செப்டம்பர் 2015-ல் 5 நாள் இருதரப்பினரும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு தற்போது நிலவரம் இவ்வாறு உள்ளது.

இருநாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்து வரும் நிலையிலும் கூட அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில் இருதரப்பினரிடையேயும் பதற்றம் நிலவுகிறது.

சீன பொருளாதாரம் விரிவாக்கம் அடைந்து வருவதால் அதன் நலன்கள் உலகளாவிய பரிமாணத்தை எட்டியுள்ளன. ஆகவே புதிய பகுதிகளிலும் தங்கள் ஆதிக்கத்தை சீனா நிலைநாட்டுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் அதன் நோக்கங்கள் பற்றி எந்த ஒரு மதிப்பு சார்ந்த கூற்றும் உள்ளடங்கியிருப்பதாக தெரியவில்லை.

சீனாவின் ஆயுதங்களை பெரும்பாலும் வாங்குவது பாகிஸ்தானே. ஆயுத விற்பனையோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு கூட்டு நடவடிக்கைகளிலும் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

1998-ம் ஆண்டு முதல் தனது 6 அண்டை நாடுகளுடன் 11 எல்லைப்பிரச்சினைகளை சீனா தீர்த்து வைத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக கடல்சார் கச்சா எண்ணெய் எரிவாயு நிரம்பிய பொருளாதார பகுதிகளில் சீனாவின் அணுகுமுறை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது” என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com


China
சீனாவின் முப்படைகளை, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக நவீன ராணுவமாக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள 13-ஆவது ராணுவ மேம்பாட்டு ஐந்தாண்டுத் திட்ட (2016-2020) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த ஐந்து ஆண்டுகளில், சீன ராணுவத்தின் போர்த் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.

2020-ஆம் ஆண்டுக்குள், சீன முப்படைகளின் அனைத்துப் பிரிவுகளும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பங்களின் உதவியுடன் முழுவதும் இயந்திரமயமாக்கப்படும்.

சீன ராணுவத்தை உலகின் தலைசிறந்த படையாக உயர்த்துவதற்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அடித்தளமாக அமையும்.

இதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, வீரர்களின் எண்ணிக்கையை 23 லட்சத்திலிருந்து 20 லட்சமாகக் குறைக்கும் நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



வலைத்தளம் : தினமணி
வலைப்பக்கம் : http://www.dinamani.com

Dawood Ibrahim
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில், D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது வீட்டைச் சுற்றி ஆயுதங்களுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தாவூத் இப்ராகிம் அங்கு வாழ்ந்து வருவது அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே, தாவூத் இப்ராகிம் இதே முகவரியில் வசித்து வருவதை ஆதாரத்துடன் கூறி, அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான், அதை செய்யவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், ''தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வீடியோ இங்கே...





வலைத்தளம் : விகடன்
வலைப்பக்கம் : http://www.vikatan.com

 
kepler satellite
சூரிய மண்டலத்தைப் போலவே, பல சூரிய மண்டலங்கள் உள்ளன. விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவற்றை நாசா அனுப்பிய கெப்ளர் கண்டுபிடித்துள்ளது.

இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை இதுவரை கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. அவற்றில் 9 கிரகங்கள் தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்றன.

அதனால் அங்கு சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள் இருப்பதால் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசாவின் தலைமை விஞ்ஞானி எலன் ஸ்டாபேன் கூறியதாவது:-

இந்த கண்டுபிடிப்பு, நமது பூமியைப் போலவே விண்வெளியில் கிரகங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கிரகங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015-ம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அப்போது மொத்தம் 4,302 கிரகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 1,284 கிரகங்கள்தான் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் 550 கிரகங்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று தெரிவித்தார். 



வலைத்தளம் : வெப்துனியா
வலைப்பக்கம் : http://www.tamil.webdunia.com


சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு சம்மதம் தெரிவித்தது.

இதுகுறித்து சிரியா ராணுவத் தலைமையகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அலெப்போ நகரில் இரண்டு நாள் தாற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஏற்பட்ட உடன்படிக்கையை சிரியா ஏற்றுக் கொள்கிறது.
அதன்படி, புதன்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் சண்டை நிறுத்தத்தை சிரியா படைகள் அமல்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்கா, ரஷியா தலைமையில் 17 நாடுகள் ஜெனீவாவில் நிகழ்த்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சிரியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி சம்மதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.), அல்-காய்தா தொடர்புடைய அல்-நுஸ்ரா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் சண்டை நிறுத்தப்பட்டு அமைதி நிலவியது.

எனினும், சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில், அரசுப் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறியதாகக் குற்றம் சாட்டிய கிளர்ச்சிக் குழுக்கள், அரசுக்கு எதிராக மீண்டும் போரிடப் போவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அலெப்போ நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. இதில் 280 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, சிரியா ராணுவம் இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 
I S
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆஸ்திரேலிய அரசால் தேடப்பட்டு வந்தவருமான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதி, இராக்கில் அமெரிக்க விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தவர் நீல் பிரகாஷ் (எ) அபு கலேத். அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதுதவிர, ஆஸ்ரேலியாவில் ஐ.எஸ். அமைப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் நீல் பிரகாஷ்.

அவர் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வந்தார். இதையடுத்து, அவரை அமெரிக்க ராணுவம் தேடி வந்தது. இந்நிலையில், இராக்கின் மொசூல் நகரில் கடந்த மாதம் 29ஆம் தேதி, அந்நாட்டு விமானப் படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் நீல் பிரகாஷ் கொல்லப்பட்டார்.
அவர் இருந்த இடத்தை கண்டறிய அமெரிக்க அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தோம் என்றார் ஜார்ஜ் பிராண்டிஸ்.

நீல் பிரகாஷ் கொல்லப்பட்டதன் மூலம், ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.


Donald trump
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளராவது உறுதியான நிலையில், ''அமெரிக்காவுக்குள் வருவதற்கு, முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்படும்; முறையான அனுமதியில்லாதவர்கள் நாடு கடத்தப்படுவர்,'' என, டொனால்டு டிரம்ப், மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தல் நடந்து வருகிறது. குடியரசு கட்சியில், துவக்கம் முதல், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன், அரசியலில் நுழைந்த இவர், ''முஸ்லிம்களை அனுமதிக்க மாட்டோம்; முறையான அனுமதியில்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்போர் நாடு கடத்தப்படுவர்,'' என, கூறி வந்தார்.

இந்நிலையில், அதிபர் வேட்பாளர் தேர்தலில், அவரை எதிர்த்து போட்டியிட்ட டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகுவதாக, இரு நாட்களுக்கு முன் அறிவித்தார். அதையடுத்து, டிரம்ப் அதிபர் வேட்பாளராவது உறுதியானது.

நேற்று முன்தினம், 'டிவி'க்கு அளித்த பேட்டியிலும், 'அமெரிக்காவில் முஸ்லிம்களை அனுமதிக்க மாட்டோம்; முறையான அனுமதியில்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், அவர்களுடைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர்' என, டிரம்ப் உறுதியாக கூறியுள்ளார். இதற்கு ஜனநாயக கட்சியில், அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள, ஹிலாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

வலைப்பக்கம் : http://www.dinamalar.com/news_detail.asp?id=1516459
வலைத்தளம் : தினமலர்


Saudi Arabia
சவுதி அரேபியா , மெக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக கூறியுள்ளது.
 
பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத அமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. 
 
இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் அந்த உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பலமணி நேரங்கள் மோதல்கள் நடைபெற்றன என்று சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

 
Donald Trump
அமெரிக்க அதிபர் தேர்தல், போட்டியாக களமிறங்கிய டெட் குரூஸ் போட்டியிலிருந்து விலகினார் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டோனால்டு டிரம்ப் தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இண்டியானா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டோனால்டு அமோக வெற்றி பெற டெட் குரூஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதனையடுத்து தான் இனி போட்டியில் தொடர விரும்பவில்லை என்று விலகியதை அடுத்து டோனால்டு டிரம்ப்தான் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது ஏறக்குறைய முடிவான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

10 மாதங்களுக்கு முன்பாக அரசியல் முகம் காட்டத் தொடங்கிய டோனாட்டு டிரம்ப் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தேசியவாதத்தை பல்வேறு சர்ச்சைக்குரிய விதங்களில் இவர் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். அமெரிக்க ஜனநாயகம் போற்றும் பல மதிப்பு மிக்க நடைமுறைகளை இவர் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தி வருவதோடு, அமெரிக்க இளைஞர்களின் அதிருப்தியில் குளிர்காயும் நோக்கங்களுடன் கடுமையான் சர்ச்சைகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் போட்டி வேட்பாளர் டெட் குரூஸின் தந்தையைப் பற்றி டோனால்டு டிரம்ப் அவதூறாகப் பேசியதை அடுத்து இருவரது பிரச்சாரமும் அரசியல் நாகரிகம் என்ற எல்லைகளைக் கடந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெட் குரூஸின் தந்தையை ஜான் கென்னடி கொலையுடன் தொடர்பு படுத்தினார் டிரம்ப், டெட் குரூஸ் இதற்குப் பதிலடியாக, “நோய்க்கூறு மிக்க பொய்யர்” டிரம்ப் என்று பதிலடி கொடுத்தார். இதனையடுத்து சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் கடைசியில் டெட் குரூஸை, டிரம்ப் பாராட்டிப் பேசினார். அதாவது தனக்கு சரியான போட்டியை ஏற்படுத்திய கடினமான போட்டியாளர் என்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்றும் பாராட்டினார்.

இந்நிலையில் குடியரசுக் கட்சியின் தேசிய கமிட்டி சேர்மன் ரெய்ன்ஸ் பிரைபஸ், டோனால்டு டிரம்ப் உத்தேச அதிபர் வேட்பாளர் என்று கூறியதோடு, ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த அனைவரும் ஒன்று படுவோம் என்றார்.

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இண்டியானா மாகாணத்தில் போட்டி அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார்.

எனினும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி மீதே தங்கள் தாக்குதல் தொடரும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.


China-Russia
ரஷ்யாவும் சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

அண்மையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் ஒத்திகைகள் நடத்தின. வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன சாதனங்களை தென்கொரியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி வடகொரியாவின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தென்கொரியாவில் நிறுவப்பட உள்ளன.

சீனாவும் , ரஷ்யாவும் கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ஏவுகணை தாக்குதலை சமாளிப்பது தொடர்பான போர் ஒத்திகையை நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டுப் போர் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் மாஸ்கோவில் போர் ஒத்திகை நடைபெறும் என்று சீன நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய, சீன அரசு வட்டாரங்கள் கூறியபோது, எந்தவொரு 3-ம் நாட்டுக்கும் எதிராக நாங்கள் போர் ஒத்திகையை நடத்தவில்லை. எங்கள் தற்காப்புக்காகவே நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளன.

சிரியாவில் அந்த நாட்டு அதிபர் ஆசாத்துக்கு எதிராக, அமெரிக்க ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. அதற்குப் பதிலடியாக சிரியாவில் ரஷ்ய ராணுவம் களமிறங்கியது.

அதேபோல வடகொரியா பிரச்சினையிலும் சீனாவும், ரஷ்யாவும் ஓரணியில் நின்று அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


The Sunday Times
இங்கிலாந்தில் இந்த ஆண்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது. அதில், முதல் இடத்தை மும்பையில் பிறந்த ரியல் எஸ்டேட் அதிபர்களும், சகோதரர்களுமான டேவிட் மற்றும் சைமன் ரூபன் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 1,310 கோடி பவுண்டு ஆகும்.

அவர்களை தொடர்ந்து, இரண்டாவது இடத்தையும் இந்தியர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா சகோதரர்கள் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 1,300 கோடி பவுண்டு ஆகும். மற்றொரு இந்தியரான லட்சுமி மிட்டல், தனது சொத்தில் நான்கில் மூன்று பங்கை இழந்ததால், 7–வது இடத்தில் இருந்து 11–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்


Hydrogen Bomb vs. Atomic Bomb
திங்கள் , ஏப்ரல் 25,2016

நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத திட்டங்கள்


வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. ஆனாலும், உலக நாடுகளின் எதிர்ப்பையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

2006-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்த வடகொரியா, கடந்த ஜனவரி மாதம் முதல்முறையாக அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்து உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம், ஐ.நா. சபை அந்த நாட்டின்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வடகொரியா கைவிட வில்லை.

நீர்மூழ்கி ஏவுகணை


இந்த நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு நீர் மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அந்த நாட்டின் கே.சி.என்.ஏ., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் வழிநடத்துதலில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.

இது ஆத்திரமூட்டும் செயல் என கூறி அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவு துறை மந்திரி ரி சு யாங், கூறியதாவது:-
தென் கொரியாவுடன் அமெரிக்கா நடத்தி வருகிற கூட்டு போர் பயிற்சிகளை நிறுத்திக்கொண்டால், நாங்களும் எங்கள் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்வோம்.

நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்கு அணு ஆயுத திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்காதான் காரணம்.

தென் கொரியாவுடனான போர் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தி விட்டால் பேச்சு வார்த்தைக்கான கதவு திறக்கும். பதற்றம் தணியும்.

கூட்டு போர் பயிற்சி சில காலத்துக்கோ, ஆண்டுகளுக்கோ நிறுத்தப்பட்டால், இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். இது ஒட்டுமொத்த உலகத்துக்கே நல்லதாக அமையும்.


United Nations


ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 32 ஆவது கூட்டத் தொடரில் அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகள் மட்டத்திலான தூதுக் குழுவைப் பங்கேற்க வைப்பது குறித்து அரசுஅவதானம் செலுத்தி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை யின் 32ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசு இம்முறையும் உயர்மட்டத் தூதுக்குழுவை அனுப்பவுள்ளது.

குறிப்பாக 32ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பான வாய்மூல மதிப் பீட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளதால் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத் தொடராக இது அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கை அரசும், உள்ளக விசாரணைப் பொறிமுறை கட்டமைப்பை வடிவமைக்கும்நோக்கில் விசேட செயலணியை அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த விசேட செயலணியின் பிரதிநிதிகள் தற்போது மக்களைச் சந்தித்து உள்ளகப் பொறிமுறைதொடர்பான யோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், அரசால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவமானது மே மாத இறுதியில் தயாராகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க ஜூன் மாதம் நடை பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்சபையின் 32ஆவது கூட்டத் தொடரில் அரசின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள உயர்மட்டதூதுக்குழு உள்ளக விசாரணைப் பொறிமுறை குறித்துச் சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்தவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசேன்கடந்த 10ஆம் திகதி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
United Nations
 

 
ecuador earthquake
ஈக்வடார் நாட்டில் கடந்த 16ம் தேதி நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கியவர்களில் 113 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

ஈக்வடாரில் நிகழ்ந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 587 பேர் உயிரிழந்தனர். 8,430 பேர் காயமடைந்தனர். 153 பேரைக் காணவில்லை என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

நிலநடுக்கத்தினால் வீடுகளை இழந்த சுமார் 25,376 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
ecuador earthquake
 

நவாஸ் ஷெரீப்


பாகிஸ்தானில் மிகப் பெரும் பணக்கார அரசியல்வாதியாக, பிரதமர் நவாஸ் ஷெரீப் உருவெடுத்துள்ளார்.பாகிஸ்தானில், எம்.பி.,க் கள், தங்கள் சொத்து விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி, 2015ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை, எம்.பி.,க்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில், பாகிஸ்தானில், மாபெரும் கோடீஸ்வர அரசியல்வாதி, பிரதமர் நவாஸ் ஷெரீப்தான் எனத் தெரிய வந்துள்ளது.நவாஸுக்கும், அவரது மனைவிக்கும் மொத்தம் ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதும், கடந்த நான்கு ஆண்டுகளில், இவர்களின் சொத்து மதிப்பு, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் ஹுசைன் நவாஸ் மூலம் பல லட்ச ரூபாய் வந்ததே இதற்கு காரணம், என நவாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ல் மட்டும், தன் மகனிடம் இருந்து, 21.5 கோடி ரூபாய் வந்ததாக, நவாஸ் தெரிவித்துள்ளார். 2014ல், 23.9 கோடி ரூபாயும், 2013ல், 19.75 கோடி ரூபாயும், வந்ததாகவும் நவாஸ் தெரிவித்துள்ளார்.

MARI themes

Powered by Blogger.