Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts

Beautiful Lips



உதடுகள் அழகு பெற குறிப்புகள்



  • பீட்ரூட்டை வெட்டி அதன் சற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிகப்பழகு பெறும்.
  • சந்தனத்தை பன்னீரில் கலந்து பூசலாம்.
  • ரோஜா இதழ்களை நசுக்கி சாற்றை எடுத்து பூசிவர உதடுகள் சிகப்பாக மாறும்.
  • ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவந்தால் உதட்டு வெடிப்புகள் மாறும்.

 
Eyebrow Threading
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!

புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING) என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பதுபற்றி விளக்க இருக்கிறேன். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண் ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.

இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளைவுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.

வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

மேலும் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .

இன்றைய கால இளையவர்களில் முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து அது மறைந்தாலும் அதன் தழும்புகளும் தடயங்களும் ஒரு சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும்.

முகப்பருவின் தழும்புகள் நம் அழகை அபடியே மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்திவிடும். வெந்தயமானது முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். முகப்பருவின் தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்

வெந்தயத்தை பேஸ்ட்டை போல அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயத்தை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி பின்பு கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும்.

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட்டாக உருவாக்கி அதனை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். சுமார் ஒரு மணிநேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவி கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறையும் மேலும் பருக்கள் உருவாவதையும் தடுக்கும்.

எலுமிச்சை சாற்றை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி குங்குமப் பூவிற்கு உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் அது கொடுப்பதில்லை.

beauty tips,  saffron,makeup tips,  skin care tips

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மற்றும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும் தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

beauty tips,  saffron,makeup tips,  skin care tips

MARI themes

Powered by Blogger.