Showing posts with label அறிவியல். Show all posts

The Reusable Launch Vehicle (RLV)

விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை ஏவி, மீண்டும் ஒரு வரலாற்றை படைக்க காத்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம். இதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவை போல விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இது மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் ராக்கெட் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் கனவு திட்டமாகும். இதற்காக, மறுபயன்பாட்டு தொழில்நுட்ப ராக்கெட் (ஆர்எல்வி) என்ற விண்கலத்தை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவை தவிர பிற முன்னணி நாடுகளே இத்திட்டத்தை கைவிட்ட நிலையில், இஸ்ரோ மிக குறைந்த எடையில் இந்த விண்கலத்தை தயாரித்து வருகிறது. சுமார் 15 ஆண்டுக்கு முன்பே இது தொடர்பாக திட்டமிடப்பட்டாலும், 5 ஆண்டுக்கு முன்தான் இதற்கான பணிகள் தொடங்கின. இதற்கான திட்டமதிப்பீடு ரூ.95 கோடி.

இந்த விண்கலம் 6.5 மீ. நீளம் கொண்ட விமானத்தை போலவும், 1.75 டன் எடை கொண்டதாகவும் இருக்கும். தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இதை விண்ணில் செலுத்தி சோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமெரிக்கா மட்டுமே 135 முறை விண்கலத்தை செலுத்தி உள்ளது. ரஷ்யா ஒரே ஒருமுறையும், பிரான்ஸ், ஜப்பான் பரிசோதனையுடனும் நின்றுவிட்டன. சீனா இந்த முயற்சியில் இதுவரை இறங்கவில்லை. எனவே, மங்கள்யானை விண்ணில் செலுத்தி சாதித்த இஸ்ரோ, விண்கலத்திலும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்யான்’ என பெயரிட இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 
sun and mercury
சூரியனின் முன் புதன்கோள் நகரும் அரிய நிகழ்வு இன்று நடந்தது. சூரியனை விடவும் புதன் கோளின் விட்டம் சிறியதாக இருப்பதால், சூரியனின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நகர்ந்தபோது அது கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளித்தது.

இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்பதால் சென்னை பிர்லா கோளரங்கில் இந்த நிகழ்வை பார்ப்பதற்காக 4 தொலைநோக்கி கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் அதன்மூலம் புதன் நகர்வை கண்டுகளித்தனர். இந்தியாவில் இந்த நிகழ்வை சூரியன் மறையும்போது காணமுடிந்தது.

புதன்கோள் சூரியனை கடக்கும் இந்த நிகழ்வு ஜப்பானின் தென்கிழக்கு பகுதிகள் தவிர ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் புலப்பட்டது. வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காண முடிந்தது.

குறிப்பாக வட அமெரிக்காவின் கிழக்கு பகுதி, தென் அமெரிக்காவின் வடக்கு பகுதி, ஆர்க்டிக், கிரீன்லாந்து, வடமேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த நிகழ்வு துவக்கம் முதல் இறுதி வரை தெரிந்தது.

அடுத்து 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி புதன் கிரகம் சூரியனை கடக்கிறது. அதனை இந்தியாவில் காண முடியாது. அதன்பின்னர் 2032ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி புதன் கிரகம் சூரியனை இதேபோன்று கடக்கும்போது இந்தியாவில் பார்க்க முடியும் என நேரு கோளரங்க துணை இயக்குனர் தெரிவித்தார்.

bed bug


மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள்- வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்று தெரியவந்துள்ளது.

வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின் அளவிலான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டைப் பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.

மிகவும் அடர்த்தியான நிறங்களையே அந்த மூட்டைப் பூச்சிகள் தேடிச் சென்றுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்கான சிறந்த வழிகளை கண்டறியமுடியும் என்று நம்பப்படுகின்றது.

துணிகளிலும், படுக்கைகளிலும், சுவரின் துளைகளிலும், மரப் பொருட்களின் இடுக்குகளிலும் ஒட்டிக்கொண்டு வாழும் இந்த மூட்டைப் பூச்சிகள், சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களை தவறுதலாக சக மூட்டைப் பூச்சிகள் என்று நினைத்துவிடுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

nasa


ஒரு நுண்ணிய விண்கலனை, ஒரு தலைமுறை காலத்துக்குள் மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு அனுப்பும் அதிரடியான திட்டம் ஒன்று தொடங்கப்படுகிறது.

கணினிகளில் வைக்கப்படும் சில்லுகள் ( சிப்ஸ்) போன்ற அளவுள்ள இந்த நுண்ணிய கலன்கள் சாதாரணமாக இது போல மற்றொரு சூரியக் குடும்பத்தை அடைய வேண்டுமானால், பல ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டியிருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பயணித்தால் , இது போல மற்றொரு சூரியக் குடும்பத்துக்குப் போய்ச்சேர 30,000 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த சின்னஞ்சிறு கலன்கள் கொள்கையளவில், நமக்கு அருகேயுள்ள நட்சத்திரத்துக்கு 30 ஆண்டுகளுக்குள் சென்றடைந்துவிடலாம் என்று கூறுகிறார்கள்.

இந்தத் திட்டத்துக்கு உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆதரவு இருக்கிறது.

இந்த கலன்கள் ஒவ்வொன்றும் சூரிய ஒளியால் இயங்கவல்ல இறக்கைகளைப் பெற்றிருக்கும். மேலும் அவை ஒளியாலும் உந்தப்படும்.

ஒரு பெரும் லேசர் கற்றையை உருவாக்கி, இந்தக் கலன்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

MARI themes

Powered by Blogger.