Showing posts with label சைவ உணவு. Show all posts

முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

  1. முள்ளங்கி 3,
  2. மிளகாய் தூள் 3 தே‚கரண்டி,
  3. கொத்துமல்லி தழை சிறிதளவு நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 2 சிறிதாக நறுக்கியது,
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை சிறிதளவு, கோதுமை மாவு 2 கப்.

செய்முறை:

  • முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். 
  • ஏளி கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். 
  • முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும். 
  • ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். 
  • சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.
  • வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே‚நூரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும். 
  • சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

அவல் பாயசம் - Aval Payasam Recipe - vegetarian samayal kurippu in tamil

தேவையானவை:


1. தேங்காய்ப்பால் -300 மி.லி

2. அவல் -250 கிராம்

3. பால் -500 மி.லி

4. திராட்சை -10

5. முந்திரிப்பருப்பு -10

6. ஏலக்காய்பொடி -1/2 ஸ்பூன்

7. சர்க்கரை -250 கிராம்

8. பச்சை கற்பூரம் – சிறிதளவு

9. நெய் -50 கிராம்

செய்முறை:


1. திராட்சை,முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்து அவலுடன் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

2. பாலை காய்ச்சி அதில் பொரித்த்வற்றை போடவும்.

3. பச்சை கற்பூரம்,ஏலக்காய்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து கிண்டவும்.

4. தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

5. பொங்கியவுடன் இறக்கவும்.அவல் பாயசம் ரெடி.

கேப்பைக் கூழ் -  Keppai Koozh Recipe -  Ragi Koozh | vegetarian samayal kurippu in tamil

தேவையானவை:

1. கேப்பை(ராகி) மாவு – 250 கிராம்

2. உப்பு –தேவையான அளவு

செய்முறை:

1. தணணீரில் கேப்பை மாவினை நன்கு கரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உற்றி சூடு செய்யவும்.

3. பின்பு அதில் கரைத்து வைத்த மாவினை கலக்கவும்.

4. அதனை கட்டி விழாமல் காய்ச்சவும்.

5. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

6. இதனை மோர் கலந்து சாப்பிடலாம்.

7. இது உடலுக்கு குளிச்சியைத் தரும்.

காலிப்பிளவர் பஜ்ஜி - cauliflower bhaji | vegetarian samayal kurippu in tamil

காலிப்பிளவர் பஜ்ஜி - cauliflower bhaji :

தேவையானவை:


1. காலிப்பிளவர் -1

2. பஜ்ஜி மாவு -200 கிராம் 

3. கடலை எண்ணெய் -250 மி.லி

4. உப்பு –தேவையான அளவு

செய்முறை:


1. காலிப்பிளவர் நறுக்கி சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. பஜ்ஜி மாவுடன் தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

3. வேக வைத்த காலிப்பிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பஜ்ஜி ரெடி


காய்கறிகள் சால்னா  - Vegetable Salna | vegetarian samayal kurippu in tamil :

காய்கறிகள் சால்னா  - Vegetable Salna :

தேவையானவை:


1. காரட் -100 கிராம்

2. பீன்ஸ் -100 கிராம்

3. உருளைக்கிழங்கு -100 கிராம்

4. குடை மிளகாய் -100 கிராம்

5. தக்காளி -3

6. வெங்காயம் -2

7. மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்

8. மஞ்சள்தூள் –சிறிதளவு

9. தனியாதூள் -1 ஸ்பூன்

10. கடுகு, சீரகம் –தலா ½ ஸ்பூன்

11. உப்பு –தேவையானது

12. எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்

13. மல்லி இலை –சிறிதளவு

14. எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு.

செய்முறை:


1. காய்களை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

3. தக்காளியை மிக்ஸியில் அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.

4. அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாதூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கிளறிவிடவும்.

5. பிறகு மொத்தக் கலவையயும் குக்கரில் வேக வைக்கவும்.

6. அதனுடன் எலுமிச்சை சாறு, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

Pav bhaji | vegetarian samayal kurippu in tamil

பாவ்பாஜி - Pav bhaji :

தேவையானவை:

1. பாவ் பன் -6

2. நறுக்கிய காலிபிளவர் -1 கப்

3. வெங்காயம் -2

4. காரட் -100 கிராம்

5. பச்சை பட்டாணி -50 கிராம்

6. தக்காளி -100 கிராம்

7. பீன்ஸ் -100 கிராம்

8. குடை மிளகாய் -1

9. உருளைக்கிழங்கு -250 கிராம்

10. இஞ்சி, பூண்டு விழுது -2 ஸ்பூன்

11. எண்ணெய் – 5 ஸ்பூன்

12. கரம் மசாலா -1 ஸ்பூன்

13. மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

14. தனியாத்தூள் -1 ஸ்பூன்

15. மல்லி இலை –சிறிதளவு

16. வெங்காயம் – சிறிதளவு

17. முந்திரி - சிறிதளவு

18. வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:


1. காளிபிளவர்,காரட்,பீன்ஸ்,ஆகியவற்றை நறுக்கி உருளைக் கிழங்கு, பச்சை பட்டாணியுடன் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

2. வாணலியில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

3. பின்பு நறுக்கிய தக்காளி, குடைமிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

4. வெந்த காய்களை மசித்து வாணலியில் சேர்க்கவும்.

5. அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

6. பாவ் பன்னை நடுவில் கட் செய்து வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து, பாஜியுடன் பரிமாறவும்.

7. பரிமாறும் சமயத்தில் வெங்காயம், மல்லி இலை, முந்திரி தூவிப் பரிமாறவும்.

vegetarian samayal kurippu in tamil

ஆப்பிள் அல்வா - Apple Halwa

தேவையானவை:


1. ஆப்பிள் துறுவியது -200 கிராம்

2. கோதுமை மாவு -200 கிராம்

3. நெய் -100 கிராம்

4. ஏலத்தூள் –சிறிதளவு

5. சீனி -400 கிராம்

6. பால் -200 மி,லி

7. முந்திரிபருப்பு – சிறிதளவு

8. கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை:


1. பாலில் ஆப்பிள் துறுவியதை போட்டு வேக விடவும்.

2. நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும்.

3. இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும்.

4. சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும்.

5. அல்வாபதம் வந்ததும் முந்திரிபருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும்.

vegetarian samayal kurippu in tamil

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:


1. வெள்ளரிக்காய் – 2

2. தயிர் -1 கப்

3. பெருங்காயத்தூள் –சிறிதளவு

4. உப்பு –தேவையான அளவு

5. எண்ணெய், கடுகு -சிறிதளவு

செய்முறை:


1. பெரிய சைஸ் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

2. இதை தயிரில் போட்டு உப்பு சேர்க்கவும்.

3. பின்பு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கொட்டவும். நன்கு கலக்கவும்.

4. தயிர் பச்சடி ரெடி.

vegetarian samayal kurippu in tamil

மைதா கேக்

தேவையானவை:


1. மைதா மாவு -500 கிராம்

2. பால் -200 மி.லி

3. முட்டை -4

4. தேங்காய் எண்ணெய் -1 லிட்டர்

5. டால்டா -100 கிராம்

6. சீனி -600 கிராம்

7. சோடா உப்பு -2 ஸ்பூன்

செய்முறை:


1. சீனியையும், முட்டையும் நன்கு அடித்து கலக்கவும்.

2. அத்துடன் சோடா உப்பு, டால்டா, பால் சேர்த்து கடைந்து கொள்ளவும்.

3. பின் மைதா சேர்த்து பிசைந்து சற்று கனமாக விரித்து டைமண்ட் வடிவில் கத்தியினால் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் இனிப்புக்குப் பதிலாக காரம் சேர்த்து தயாரிக்கலாம்.

vegetarian samayal kurippu in tamil

பிரட் அல்வா

தேவையானவை:


1. இனிப்பு பிரட் -500 கிராம்

2. நெய் -200 கிராம்

3. சர்க்கரை -750 கிராம்

4. முந்திரி -50 கிராம்

செய்முறை :


1. வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும்.

2. பின்பு பிரட் துண்டுகளை சேர்க்கவும்.

3. பிரட் பொன்னிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

4. அல்வா நன்றாக திரண்டு, நெய் கறுகல் வாசனை வரும் முன்பு இறக்கிவிடவும்.

vegetarian samayal kurippu in tamil

பாகற்காய் ஸ்டஃப்

தேவையானவை:


1. பாகற்காய் -9

2. உருளைகிழங்கு -250 கிராம்

3. தக்காளி -1

4. வெங்காயம் -2

5. மிளகாய் -3

6. மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

7. மல்லி தூள் -2 ஸ்பூன்

8. மிளகாய் தூள் -2 ஸ்பூன்

9. எலுமிச்சம் பழம் -1

10. உப்பு –தேவையான அளவு

11. எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:


1. பாகற்காய்களை கழுவி வட்டங்களாக வெட்டி உப்பு சேர்த்து ½ மணி நெரம் ஊற வைக்கவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும் வெட்டிய வெங்காயம், தக்காளி ,மிளகாய், பூண்டு,மல்லி இலை, கருவேப்பிலை போட்டு வதக்கி பாகற்காய்களை சேர்க்கவும்.

3. அதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

4. பாகற்காய் நன்றாக வெந்ததும் புளிக்கரைசல்,வெல்லத்தையும் 1 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி குழம்பு நன்றாகக் கொதித்ததும் எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

vegetarian samayal kurippu in tamil

பீட்ரூட் சூப்

தேவையானவை:


1. பீட்ரூட் -250 கிராம்

2. பல்லாரி -1

3. உருளைக்கிழங்கு -1

4. எலுமிச்சம் பழம் -1/2

5. புதினா -சிறிதளவு

6. கிரீம் -1/2 கப்

7. மிளகு தூள் –தேவையானது

8. உப்பு –தேவையானது

9. எண்ணெய் –சிறிதளவு

செய்முறை:


1. பீட்ரூட், உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேகவைக்கவும்.

2. பல்லாரியை சிறிதாக நறுக்கி எண்ணெய்யில் தாளித்து வேக வைத்து கொள்ளவும்.

3. இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

4. பின்பு அதில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

5. அதில் மிளகுதூள், உப்பு சேர்க்கவும்.சூப் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கிரீம் புதினா சேர்த்து பருகவும்.

vegetarian samayal kurippu in tamil

சைனீஸ் புலாவ்

தேவையானவை:


1. பாஸ்மதி அரிசி -1 கிலோ

2. குடை மிளகாய் -1

3. காரட் -1

4. பீன்ஸ் -100 கிராம்

5. கோஸ் -100 கிராம்(துருவி)

6. புதினா -1 கட்டு

7. மிளகாய் -5

8. வெள்ளை மிளகுபொடி -1 ஸ்பூன்

9. அஜினோ மோட்டோ -1 ஸ்பூன்

10. உப்பு –தேவையான அளவு

11. எண்ணெய் –சிறிதளவு

செய்முறை:


1. அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்கிற அளவில் நீர்விட்டு வேக வைக்கவும்.

2. சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.

3. காய்கறிகளை நறுக்கி, பச்சை மிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைக்கவும்.

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி புதினா இலைகளை போட்டு வதக்கவும்.

5. பின்னர் காய்கறிகளை போட்டு, உப்பு சேர்த்து ஒரு தடவை புரட்டி ஆறிய சாதத்தில் கொட்டவும்.

6. அஜினோ மோட்டோவும், வெள்ளை மிளகுபொடியும் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும்.

7. சைனீஸ் புலாவ் ரெடி.

vegetarian samayal kurippu in tamil

தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை:


1. தேங்காய் -1

2. உருளைக்கிழங்கு -300 கிராம்

3. மிளகாய் -4

4. மல்லி, சீரகம் -2 ஸ்பூன்

5. கத்தரிக்காய் -4

6. பீர்க்கங்காய் -1

7. பூண்டு -1

8. மஞ்சள் தூள் -சிறிதளவு

செய்முறை:


1. தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடுக்க வேண்டும்.

2. இரண்டாவது பாலில் அரைத்த மிளகாய், மல்லி, சீரகம் கலக்கவும்.

3. காய்கறிகளை வெட்டி மசால் கலந்து தேங்காய்ப்பாலில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

4. வெந்தவுடன் கெட்டிப் பாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சள் போடவும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு ,ஏலம் போட்டுத் தாளிக்கவும். எலுமிச்சம்பழம் பாதி மட்டும் பிழிந்து இறக்கவும்.

Vegetarian samayal kurippu in tamil

வாழைப்பூ வடை

தேவையானவை:


1. துவரம் பருப்பு -100 கிராம்

2. கடலைப் பருப்பு -100 கிராம்

3. வாழைப்பூ -1

4. வெங்காயம் -1

5. காய்ந்த மிளகாய் -7

6. உப்பு –தேவையான அளவு

7. மஞ்சள் தூள் -1 ஸ்பூன்

8. சோம்பு, சீரகம் – 1 ஸ்பூன்

9. எண்ணெய் –சிறிதளவு

செய்முறை:


1. பருப்பு வகைகளை ஒரு மணி நெரம் ஊற வைக்கவும்.

2. வாழைப்பூவைச் சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

3. கிரைண்டரில் ஊறிய பருப்பு, மிளகாய்,சோம்பு,சீரகம்,உப்பு போட்டு நறநறவென்று அரைத்து கடைசியாக வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

4. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வடையாகப் பொரித்து எடுக்கவும்.

MARI themes

Powered by Blogger.