Showing posts with label தற்போதைய செய்திகள். Show all posts



இன்று தமிழகம் முழுவதும் பன்னிரென்டாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் இன்று(பிப்.8) தொடங்குகிறது:



தமிழகம் முழுவதும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரவிருக்கிற மார்ச் மாதம் நான்காம் தேதி தொடங்கி, ஏப்ரல் ஒன்றாம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வினை எட்டு லட்சத்து என்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதன்படி அறிவியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான செய்முறைத்தேர்வுகள் இன்று(பிப்.8)தொடங்குகிறது. இத்தேர்வுகள் இன்று முதல் பதினைந்தாம் தேதி வரை சில பள்ளிகளுக்கும், பதினாறாம் தேதி முதல் இருபத்தி ஐந்தாவது தேதி வரை சில பள்ளிகளுக்கும் என இரு கட்டமாக நடைபெறுகிறது.

இந்ததேர்வில் மாணவர்களின் செய்முறைப்பதிவு ஏடு, வருகைப்பதிவு மற்றும் செய்முறைத்தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் வேறு பள்ளியிலிருந்து செல்லும் புறத்தேர்வாளர், தேர்வு அலுவலராக நியமிக்கப்படுவார். மாணவர்கள் மற்றும் தேர்வாளர்கள் 3மணி நேரம் முழுமையாக ஆய்வகத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவியல் தேர்வில் மட்டும் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

தேர்வு அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக சமர்பிக்க வேண்டும். ஆய்வகங்களில் செய்முறை தேர்வுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், இருப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்  பன்னிரென்டாம் வகுப்பு செய்முறைத்தேர்வினை தொடர்ந்து, வரும் இருபத்தி இரண்டாம் தேதி பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பன்னிரென்டாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் இன்று தொடக்கம்:

MARI themes

Powered by Blogger.