Showing posts with label Cinema. Show all posts

ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷால் பேட்டி


தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சென்னை தியாகராய நகரில் நடந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், நடிகர்கள் எஸ்.வி.சேகர், பசுபதி, ராம்கி, நடிகைகள் லலித குமாரி, சங்கீதா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.

முன்னதாக நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு வந்த விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்கத்திடம் ரூ.48 லட்சம் இருப்பு இருந்தது. மேலும் ரூ.2 கோடி கடன் வாங்கி மொத்தம் ரூ.2 கோடியே 48 லட்சம் செலுத்தி நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம்.



தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிட நிதி திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம்.

இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரை உலகினரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதே நேரம் நடிகர் சங்கம் என்று வரும்போது, கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அழைக்க இருக்கிறோம். என்று விஷால் கூறினார்.


மலையாள ரீமேக்கில் நடிப்பது குறித்து ரஜினி தரப்பு மறுப்பு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்திலும், சங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.






இந்த நிலையில் இப்படங்களை அடுத்து அவர் சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்தது. இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பு வதந்தி என தற்போது கூறியுள்ளது. ‘இப்போதைக்கு ரஜினிகாந்த் கபாலி மற்றும் ‘2.0’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த படங்களைத் தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே ரஜினியின் அடுத்த படம் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்’ என்று ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது





சல்மான்கானுடன்சுல்தான்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் கோலி காதலை முறித்தார் அனுஷ்கா சர்மா


வீராட் கோலி,  நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார். இந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக  செய்திகள் வெளி வந்தன.
இந்நிலையில் கோலிஅனுஷ்கா சர்மா காதல் முறிந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருவரும் சேர்ந்து ஊரை சுற்றியதும் பறக்கும் முத்தத்தை பதிவு செய்ததும், கோலி சென்ற இடத்துக்கெல்லாம் காதலியையும் அழைத்துச் சென்றதும் எவர் கண்ணில் பட்டதோ எல்லாம் கனவாகவே முடிந்து விட்டது.
இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அனுஷ்கா சர்மாவிடம் கோலி  தெரிவித்த போது, ‘எதில் ஹைமுஷ்சில்படம் இன்றி வேறுபட வாய்ப்புகளை ஏற்க மாட்டேன் என்று அனுஷ்கா சர்மா உறுதி கூறினார்.

இப்பொழுது சல்மான்கானுடன்சுல்தான்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை  ஏற்க வேண்டாம் என்று கோலி கூறியிருக்கிறார். ஆனால் காதல் முறிந்தாலும் பரவாயில்லை சல்மான்கானுடன் நடிப்பதற்குதான் முதல் இடம் என்று அனுஷ்கா சுல்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார். இந்த படத்தில் நடித்தே தீருவேன் என்று அனுஷ்கா சர்மா பிடிவாதமாக இருந்து விட்டார்.
இதனால் என்னைவிட சல்மான் படத்தில் நடிப்பது தானே உனக்கு முக்கியம் இனி உன்னுடன் எனக்கு உறவு வேண்டாம் என்று கோலி காதல் ரத்து செய்து அனுஷ்கா சர்மாவுக்குடாடாகாட்டிவிட்டார்.





MARI themes

Powered by Blogger.