முள்ளங்கி சப்பாத்தி
- முள்ளங்கி 3,
- மிளகாய் தூள் 3 தே‚கரண்டி,
- கொத்துமல்லி தழை சிறிதளவு நறுக்கியது
- பச்சை மிளகாய் 2 சிறிதாக நறுக்கியது,
- உப்பு தேவையான அளவு
- எண்ணை சிறிதளவு, கோதுமை மாவு 2 கப்.
செய்முறை:
- முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
- ஏளி கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.
- வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே‚நூரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.
- சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.







![[featured] [featured]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4dQ-ltDJrwJNPnQtGQMVhKkGPOv5_LsZ2rgoTVLx-2z7xBtpQCGCpr-HBiSRlcDmdphgryUR_Y-nQW99PP6FS5Z0H8bIQK-OT3bMODsuQXC_hkdidj774kaZ7wxljEVk4PrYylHh_kcJm/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AE%25BE+%25E0%25AE%25A4%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg)
![[featured] [featured]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFDCez-GXwETDNDbnEqn7S-H3GYeyhdCO1jgknyphaU6P5ovfNVIodxAyKVtAKk7JakTEYD8dC0uk0uVlD7f2wqnoeeboV0dF5EShESUDLlfmuzXDjHKlz8qx8gcbBpex3KjEug12lb3L9/s320/24-1440400574-cover-image-.jpg)