A+ A-

முந்திரி புட்டிங்


தேவையான பொருட்கள் :

  1. முந்திரி பருப்பு-10
  2. முட்டை-1
  3. தேங்காய் பால்-2கப்
  4. சர்க்கரை(சீனி)-1கப்
  5. ஏலக்காய் பொடி-1சிட்டிகை

செய்முறை :

  • முந்திரி பருப்பை பொடித்து கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்கவும்.
  • சீனியை பொடிக்கவும்.
  • முட்டையை நன்றாக அடிக்கவும்.
  • முட்டையுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அடித்து குக்கரில் வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும்.

குறிப்பு:

சூடாகவும் சாப்பிடலாம்.குளிர வைத்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும். இனிப்பு அதிகமாக விரும்புபவர்கள் சீனி 1 1/2
கப் சேர்க்கலாம். தேங்காய் பாலுக்கு பதிலாக பாலும் சேர்க்கலாம்.இரண்டும் கலந்தும் செய்யலாம்.

முந்திரி பருப்பை பொடித்து கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்கவும். சீனியை பொடிக்கவும். முட்டையை நன்றாக அடிக்கவும். முட்டையுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அடித்து குக்கரில் வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக