Showing posts with label கட்டுரைகள். Show all posts


உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில்

உலகின் மிகப்பெரிய தொங்கு பாலம் மெக்ஸிக்கோவில் உள்ளது.

1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டது. பாலத்தின் மையப் பரப்பு பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது.

பல மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவான இந்த பாலம் மெக்ஸிக்கோவின் சியரா மத்ரே ஒக்ஸிடென்டல் மலையின் ஆழமான இடுக்குகளின் வழியாக ஊடறுத்துச் செல்கிறது. இதை உருவாக்க 4 ஆண்டுகள் ஆயிற்று.

1810ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிடமிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரம் பெற்று இருநூறு ஆண்டுகளைக் குறிக்கும் நினைவுச் சின்னமாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.




உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில்


உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில்


beautiful couple
திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.

ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.

பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.

இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.

பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள் ,

பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

விட்டு கொடுங்கள் ,

இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.

ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்பு / அரவணைப்பு ,

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள்.

இல்லற சந்தோஷம் பொங்க ,

அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

 
Sigmund Freud
சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud - மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.

கண்டுபிடிப்புகள்,


சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,

  • உணர்வு மனம் (Conscious Mind)
  • உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
  • தொலை நோக்கு மனம்
கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறியதாலும் இவர் புகழ்பெற்றார். மேலும் மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். அவை,
 
  • உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
  • முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
  • மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
 
இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

கருத்துகள்,


  • சிக்மண்ட் பிராய்ட்,’மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்’ என்று கருதினார்.
  • பிராய்டு முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது என்று விளக்கினார்.

 
Most Breathtaking Highways Of The World
விடுமுறை நாட்களில் உங்கள் நண்பர்களுடன் நெடுந்தூரம் பயணம் செய்வது ஒரு உங்கள் வாழ்நாளில் இனிமையான அனுபவம், சுவாரஸ்யமானதும் கூட. ஆனால் நீங்கள் மூச்சடைக்கும் ஒரு பயணத்தை விரும்பியிருக்கிரீர்களா?

உலகில் பல சாலைகள் வசீகரம் மற்றும் அழகு ஆகியவற்றால் சுற்றுலா பயணிகளை ஈர்கின்றன. இங்கே உலகின் மிக மூச்சடைக்க வைக்கும் நெடுஞ்சாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கொடுக்கப்பட்டுள்ளது.

 

10. அட்லாண்டிக் பெருங்கடல் சாலை- நோர்வே

 இது பல சின்ன தீவுகளில் உள்ள கிராமங்களை இணைக்க பொடப்பட்டுள்ளது. அற்புதமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது, கண்டிப்பாக பயணத்தை விரும்புவோர்க்கும், சினிமா ஷூட்டிங்க் நல்ல இடமாக இருக்கிறது. 
 
Atlantic Ocean Road- Norway
 

9. ஹனா நெடுஞ்சாலை மோய்


மோயியின் ஹனா நெடுஞ்சாலை, ஹவாயின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு மற்றொரு மூச்சடைக்க வைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளது. 84 கிலோ மீட்டர் நீண்டஒரு பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகளின் அழகு நீங்கள் பயணம் செய்யும் போது மிகவும் மறக்கமுடியாத அனுபவமாக அமையும். 59 பாலங்கள், 600 க்கும் அதிகமான வளைவுகள், மற்றும் 100 க்கும் மேற்பட்ட வயது இருக்கும் பண்டைய பாலங்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
Hana highway- Maui


8. ரோதங் பாஸ் இந்தியா


இந்தியாவில் ரோஹ்டங் பாஸ் அதன் மூச்சடைக்கும் இயற்கைக்காட்சி, மலை முகடுகள், ஆறுகள் மற்றும் பனிப்பாறைகள் மற்றும் நம்பமுடியாத அழகான இயற்கை சூழல் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். நீங்கள் ஒரு நிலச்சரிவு, சீரற்ற காலநிலை அல்லது போக்குவரத்து நெரிசல் எதிர்கொள்ள வில்லையென்றால் அதிர்ஷ்டசாலிகள். இந்த நெடுஞ்சாலை உங்களுக்கு ஒரு நம்பமுடியாத ஆபத்தான இன்னும் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.
 
 
Rohtang Pass- India
 

7. கோல் டி இஸெரான்- பிரான்ஸ்


கோல் டி இஸெரான் ஆல்ப்ஸ் மலையின் மிக உயரமான சாலையாக உள்ளது. அதன் கண்ணுக்கினிய நீர்வீழ்ச்சிகள், சில பகுதிகளில் காட்சியகங்கள் மற்றும் சுரங்கங்கள் முற்றிலும் கண்கவர் காட்சியாக உள்ளது. 

Col de I’Iseran- France


6. தேசிய ரூட் 40 அல்லது ருதா 40- அர்ஜென்டீனா


தேசிய ரூட் 40 அல்லது ருதா 40 உலகின் மிக பெரிய நெடுஞ்சாலைகளுள் ஒன்று. இந்த சாலை ஒரு பெரிய, நீண்ட ஆறுகளையும், ஒரு டஜன் மலைக் கணவாய்களில் மற்றும் 20 தேசிய பூங்காக்கள் வழியாக கடந்து செல்கிறது. 

National Route 40 or Ruta 40- Argentina


MARI themes

Powered by Blogger.