A+ A-

மக்காரோனி சூப் - Macaronic Soup

மக்காரோனி சூப் - Macaronic Soup

 தேவையான பொருட்கள் :

மேக்ரோனி - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்த சோளமுத்து - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன் (அரிந்தது),
வெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு,
சர்க்கரை - தேவையான அளவு,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 1,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை :

மேக்ரோனியை தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பாலில் வெண்ணெய் விட்டு சோள மாவை போட்டு குறைந்த தணலில் 2 நிமிடம் வறுக்கவும். தக்காளி, கேரட், வெங்காயத்தாளை நீர்விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடிகட்டி ஸ்டாக் தயாரித்துக் கொள்ளவும். வறுத்த சோள மாவில் ஸ்டாக் (காய்கறி வெந்த நீர்) சிறிது ஊற்றி பேஸ்ட் போலத் தயாரிக்கவும். வெந்த மேக்ரோனி, உப்பு, சர்க்கரை, சோள மாவு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் ஸ்டாக்குடன் சேர்த்து மீண்டும் சூடாக்கவும். வெந்த சோள முத்தை தூவி சூடாகப் பரிமாறவும்.

Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes, Recipes For Cooking, Recipe Videos,Recipe Gallery, Recipe Photos