A+ A-

Pav bhaji vegetarian samayal kurippu in tamil

Pav bhaji | vegetarian samayal kurippu in tamil

பாவ்பாஜி - Pav bhaji :

தேவையானவை:

1. பாவ் பன் -6

2. நறுக்கிய காலிபிளவர் -1 கப்

3. வெங்காயம் -2

4. காரட் -100 கிராம்

5. பச்சை பட்டாணி -50 கிராம்

6. தக்காளி -100 கிராம்

7. பீன்ஸ் -100 கிராம்

8. குடை மிளகாய் -1

9. உருளைக்கிழங்கு -250 கிராம்

10. இஞ்சி, பூண்டு விழுது -2 ஸ்பூன்

11. எண்ணெய் – 5 ஸ்பூன்

12. கரம் மசாலா -1 ஸ்பூன்

13. மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

14. தனியாத்தூள் -1 ஸ்பூன்

15. மல்லி இலை –சிறிதளவு

16. வெங்காயம் – சிறிதளவு

17. முந்திரி - சிறிதளவு

18. வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:


1. காளிபிளவர்,காரட்,பீன்ஸ்,ஆகியவற்றை நறுக்கி உருளைக் கிழங்கு, பச்சை பட்டாணியுடன் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

2. வாணலியில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

3. பின்பு நறுக்கிய தக்காளி, குடைமிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

4. வெந்த காய்களை மசித்து வாணலியில் சேர்க்கவும்.

5. அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

6. பாவ் பன்னை நடுவில் கட் செய்து வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து, பாஜியுடன் பரிமாறவும்.

7. பரிமாறும் சமயத்தில் வெங்காயம், மல்லி இலை, முந்திரி தூவிப் பரிமாறவும்.

Pav bhaji is a fast food dish from Maharashtra, India, consisting of a vegetable curry served with a soft bread roll.