A+ A-

அமெரிக்க வான்வழித் தாக்குதல்: இந்திய வம்சாவளி ஐ.எஸ். பயங்கரவாதி சாவு

 
I S
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆஸ்திரேலிய அரசால் தேடப்பட்டு வந்தவருமான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதி, இராக்கில் அமெரிக்க விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தவர் நீல் பிரகாஷ் (எ) அபு கலேத். அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதுதவிர, ஆஸ்ரேலியாவில் ஐ.எஸ். அமைப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் நீல் பிரகாஷ்.

அவர் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வந்தார். இதையடுத்து, அவரை அமெரிக்க ராணுவம் தேடி வந்தது. இந்நிலையில், இராக்கின் மொசூல் நகரில் கடந்த மாதம் 29ஆம் தேதி, அந்நாட்டு விமானப் படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் நீல் பிரகாஷ் கொல்லப்பட்டார்.
அவர் இருந்த இடத்தை கண்டறிய அமெரிக்க அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தோம் என்றார் ஜார்ஜ் பிராண்டிஸ்.

நீல் பிரகாஷ் கொல்லப்பட்டதன் மூலம், ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆஸ்திரேலிய அரசால் தேடப்பட்டு வந்தவருமான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதி, இராக்கில் அமெரிக்க விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.