A+ A-

ஜெனிவாக் கூட்டத்துக்கு உயர்மட்டத் தூதுக் குழு அனுப்ப இலங்கை அரசு திட்டம்!


United Nations


ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 32 ஆவது கூட்டத் தொடரில் அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகள் மட்டத்திலான தூதுக் குழுவைப் பங்கேற்க வைப்பது குறித்து அரசுஅவதானம் செலுத்தி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை யின் 32ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசு இம்முறையும் உயர்மட்டத் தூதுக்குழுவை அனுப்பவுள்ளது.

குறிப்பாக 32ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பான வாய்மூல மதிப் பீட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளதால் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத் தொடராக இது அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கை அரசும், உள்ளக விசாரணைப் பொறிமுறை கட்டமைப்பை வடிவமைக்கும்நோக்கில் விசேட செயலணியை அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த விசேட செயலணியின் பிரதிநிதிகள் தற்போது மக்களைச் சந்தித்து உள்ளகப் பொறிமுறைதொடர்பான யோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், அரசால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவமானது மே மாத இறுதியில் தயாராகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க ஜூன் மாதம் நடை பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்சபையின் 32ஆவது கூட்டத் தொடரில் அரசின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள உயர்மட்டதூதுக்குழு உள்ளக விசாரணைப் பொறிமுறை குறித்துச் சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்தவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசேன்கடந்த 10ஆம் திகதி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
United Nations
 

ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 32 ஆவது கூட்டத் தொடரில் அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகள் மட்டத்திலான தூதுக் குழுவைப் பங்கேற்க வைப்பது குறித்து அரசுஅவதானம் செலுத்தி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.