A+ A-

2020-க்குள் உலகின் அதி நவீன ராணுவம்: சீனா திட்டம்


China
சீனாவின் முப்படைகளை, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக நவீன ராணுவமாக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள 13-ஆவது ராணுவ மேம்பாட்டு ஐந்தாண்டுத் திட்ட (2016-2020) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த ஐந்து ஆண்டுகளில், சீன ராணுவத்தின் போர்த் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.

2020-ஆம் ஆண்டுக்குள், சீன முப்படைகளின் அனைத்துப் பிரிவுகளும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பங்களின் உதவியுடன் முழுவதும் இயந்திரமயமாக்கப்படும்.

சீன ராணுவத்தை உலகின் தலைசிறந்த படையாக உயர்த்துவதற்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அடித்தளமாக அமையும்.

இதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, வீரர்களின் எண்ணிக்கையை 23 லட்சத்திலிருந்து 20 லட்சமாகக் குறைக்கும் நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



வலைத்தளம் : தினமணி
வலைப்பக்கம் : http://www.dinamani.com

சீனாவின் முப்படைகளை, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக நவீன ராணுவமாக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது.