A+ A-

ஆன்மிக சிந்தனைகள் - 04ஏப்ரல்,2016,

ஷீரடி பாபா,

  • பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.
  • காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.
  • இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
  • பணத்திற்கு அடிமையாகி கருமியாகி விடாதே. தர்ம சிந்தனையோடு ஏழை எளியவருக்கு உதவி செய்.
  • உண்மை எது உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே உண்மையான விவேகம்.

நபிகள் நாயகம்,

  • பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது.
  • மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லலாம். போர்க்களத்தில் எதிரியை தந்திரத்தால் வெல்வதற்காக பொய் சொல்லலாம்.
  • அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய தளம் பள்ளிவாசலாகும். அவனுக்கு மிக மிக வெறுப்புக்குஉரிய இடம் கடைவீதியாகும்.
  • சொர்க்கம் வேண்டுமா? விருப்பம் கொண்டவர் பெற்றோர்களை சந்தோஷப்படுத்தவும்.
  • நீங்கள் இரவில் அதிகமாக தூங்காதீர்கள். ஏனென்றால் அதிகமாக தூங்கினால் கியாமநாளில் ஏழையாக எழுப்பப்படுவீர்கள்.
  • பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.

பைபிள் பொன்மொழிகள்,

  • உன் பொக்கிஷம் எங்கு இருக்கிறதோ, அங்கு தான் உன் இருதயமும் இருக்கிறது.
  • எல்லாவற்றிற்கும் மேலாக உன் இருதயத்தைக் காப்பாற்றிக் கொள்.
  • நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.
  • கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.
  • எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து, நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.

ரவீந்திரநாத் தாகூர்,

  • தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.
  • நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். இறைவனோ, கருணை உள்ளம் கொண்டவனாக திகழ்கிறான்.
  • பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
  • இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான். மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.
  • மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.
  • நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான்.
  • உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் அளிப்பதை அனுபவியுங்கள்.

indian philosophers, divine being, hindu philosophy, religion philosophy, spiritual philosophers, hindu philosophers, adi sankarar, sathya sai, vivekanandar, bharathiyar, mata amirtanandamayi, saradha devi, ramakrishna paramahamsar, kabir, sri annai, kirubananda vaariyaar, sri aravindar, gandhiji, rabindranath tagore, thiruvalluvar, muralidara swamiji, dayananda saraswathi, ramanar, ramanujar, vyasar, rajaji, kamalathmanandar