A+ A-
supreme court


புதுடில்லி 23-04-16, திரு மணமான பெண்ணையும், தனது வாரிசாக அறிவித்து, சொத்துகளை தந்தை எழுதி வைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலத் தின் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் மூலம் கொல்கத்தா வின் சால்ட் லேக் சிட்டி யில், அடுக்குமாடி குடியி ருப்பில் பிஸ்வா ரஞ்சன் சென்குப்தா என்பவர் வீடு ஒன்றை வாங்கினார். இவ ருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். அவரது மகள் இந்திராணி வாஹிக்கு திருமணமாகி விட்டது. மனைவியும், மகனும் கொடு மைப்படுத்தியதால் தனது சொத்துகளுக்கு மகளை வாரிசாக நிய மித்தார்.

சென்குப்தாவின் மறை வுக்கு பிறகு வீட்டை தனது பெயருக்கு மாற்றக் கோரி அவரது மகள் இந்திராணி வாஹி மனு செய்தார். இதற்கு அவரது அம்மா வும், சகோதரனும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டின் உரிமையை மாற்ற துணை பதிவாளர் மறுத்து விட் டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த மேற்கு வங்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தந்தையின் வீட்டை இந்திராணி பெயருக்கு பதிவு செய்ய உத்தரவிட் டார். ஆனால், இரு நீதி பதிகள் கொண்ட அமர்வு, மூவருக்கும் இதில் உரிமை உள்ளதாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந் திராணி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதி பதிகள் ஜே.எஸ்.கேகர், சி. நாகப்பன் ஆகியோர் அடங் கிய அமர்வு, ஒருவரது மறைவுக்குப் பிறகு, அவர் யாருக்கு சொத்தை கொடுக் கும் நோக்கத்துடன் வாரி சாக குறிப்பிடுகிறாரோ அவருக்குத்தான் கொடுக்க முடியும். இதில் மற்றவர் களின் பங்கு, மரபுவழி முறைக்கு இடமில்லை. வாரிசுதாரரை அவர் நிய மிக்காவிட்டால், இதில் அனைவரும் உரிமை கோர லாம். சட்டப்படி பிஸ்வா ரஞ்சன் தனது வாரிசாக நியமித்துள்ள இந்தி ராணிக்குதான் இதில் முழு உரிமயும் உள்ளது. எனவே வீட்டை அவரது பெய ருக்கு கூட்டுறவு சங்க பதி வாளர் பதிய வேண்டும் என உத்தரவிட்டனர்.

திரு மணமான பெண்ணையும், தனது வாரிசாக அறிவித்து, சொத்துகளை தந்தை எழுதி வைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.