அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் மெச்சும்படி உள்ளது.
இதனையடுத்து, படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி நேற்று கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் விஜய், அட்லி, தாணு, மகேந்திரன், நைனிகா, மீனா உள்ளிட்ட படக்குழுவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
![[featured] [featured]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZb_uSILZr1qKOvmplbk_AZ1VzI_64qWa_PufmCeNMEti2elxzSDkepDBcZrqtPxpEa_kfj4Mz11o_puLeuhyphenhyphenIdp0NGIVFCyqT-addT9jtNJDKwvILNUBtWBI34OW4TUyl-mtBcu81dISf/s320/theri_success2.jpg)


Post a Comment