A+ A-

குழந்தைகள் திரைப்படமான ஜங்கிள் புக் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

The Jungle Book

டிஸ்னி தயாரிப்பில் வெளியாகவிருக்கும் குழந்தைகள் திரைப்படமான ஜங்கிள் புக் திரைப்படத்திற்கு இந்தியத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தப் படத்திற்கு பெரியவர்கள் உடன் வராமல் குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்தப் படம் ரொம்பவும் பயமுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தணிக்கை வாரியத்தின் தலைவர் பஹ்லாஜ் நிஹ்லானி இந்திய ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ரட்யாட் கிப்ளிங்க் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து 1967ல் வெளியான அனிமேஷன் திரைப்படத்தின் ரீ -மேக் ஆக இந்தப் புதிய படம் வெளியாகிறது.

இந்தத் திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் உள்ள 3டி தொழில்நுட்பத்தால் மிருகங்கள் பார்ப்பவர்கள் மீதே தாவுவதைப் போல இருப்பது மிகவும் பயமுறுத்துவதாக இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பஹ்லாஜ் நிஹ்லானி கூறியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் விஷால் பரத்வாஜ், இந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கும் வகையில் படத்தில் எதுவும் இல்லையென கூறியிருக்கிறார்.

இந்தியத் தணிக்கை வாரியத்தின் இந்த முடிவு, சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியிருக்கிறது.

அமெரிக்காவிலும் இந்தப் படம், பெற்றோரது வழிகாட்டுதலில் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற சான்றிதழே இந்தப் படத்திற்குத் தரப்பட்டுள்ளது.

டிஸ்னி தயாரிப்பில் வெளியாகவிருக்கும் குழந்தைகள் திரைப்படமான ஜங்கிள் புக் திரைப்படத்திற்கு இந்தியத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.