A+ A-

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல், மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் உத்தரவு

 
puducherry-Assembly-Elections-Section-144-CrPC
புதுச்சேரி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.


புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் புதுச்சேரி வந்துள்ளனர். புச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரையில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.


தேர்தல் முடியும் வரையில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயண சாமி பேசுகையில் அனைத்து கட்சியினரும் விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை தேவையென்றும் கூறிஉள்ளார். 

வலைப்பக்கம் : http://www.dailythanthi.com/News/Election2016
வலைத்தளம் : தினத்தந்தி

புதுச்சேரி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.