வங்கிப் பணியாளர்கள் ஜுலை 29-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய் திருக்கின்றனர். 9 வங்கி சங்கங் கள் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கின்றன.
தனியார்மயத்துக்கு எதிர்ப்பு
வங்கித்துறை சீர்த்திருத்தம் மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்கும் நடவடிக்கையை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்குகளை குறைப்பது, போது மான நிதி வழங்காதது, பொதுத் துறை வங்கிகளை இணைப்பது, புதிய தனியார் வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் பலவீனம் அடையும் என்று அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கத்தலைவர் சி.ஹெச். வெங்கடாலசம் தெரிவித் தார்.வங்கித்துறை மொத்த வாராக் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்கள் வாங்கியவை ஆகும். ஆனால் இந்த நிறுவ னங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வாராக்கடனுக்காக பொதுத்துறை வங்கிகள் அதிக தொகையை ஒதுக் கீடு செய்வதால் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் பாதிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் செலுத்தா கடனாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.
Post a Comment