மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயு உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவன கிளைகளில் சீனியர் மேலாளர் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Senior Manager (HR):
2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).சம்பளம்:
ரூ.36,600 - 62,000.
தகுதி:
60% தேர்ச்சியுடன் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு முழுநேர எம்பிஏ அல்லது 65% தேர்ச்சியுடன் தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழில் உறவுகள்/ மனிதவள நிர்வாகம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை சிறப்பு பாடமாகக் கொண்டு சமூகவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது 60% தேர்ச்சியுடன் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் இரண்டாண்டு முழு நேர ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம்/ 65% தேர்ச்சியுடன் தொழிலாளர் மேலாண்மை பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழில் உறவுகள் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ. பி.எல். படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் முன்அனுபவம்.
வயது:
40க்குள்.
2. Senior Manager (Law):
2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).சம்பளம்:
ரூ.36,600 - 62,000.
தகுதி:
55% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு முழுநேர பட்டப்படிப்பு மற்றும் 55% தேர்ச்சியுடன் முழுநேர பி.எல். பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் முன்அனுபவம்.
வயது:
43க்குள்.
3. Deputy Manager (Law):
2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).சம்பளம்:
ரூ.29,100 - 54,500.
தகுதி:
60% தேர்ச்சியுடன் முழுநேர ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் 60% தேர்ச்சியுடன் மூன்றாண்டு எல்எல்பி படிப்பு அல்லது 60% தேர்ச்சியுடன் 5 ஆண்டு எல்எல்பி பட்டம். சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
வயது:
34க்குள்.
4. Senior Welfare officer for GAIL, Patta, Uttarpradesh:
1 இடம் (பொது).சம்பளம்:
ரூ.24,900 - 50,500.
தகுதி:
சட்டத்தில் ஏதேனும் ஒரு பட்டத்துடன் சமூக அறிவியல் அல்லது தொழிலாளர் நலன் அல்லது பணியாளர் மேலாண்மை ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் அல்லது சமூக அறிவியல் அல்லது தொழிலாளர் நலன் அல்லது தொழில் உறவுகள் மற்றும் பணியாளர் மேலாண்மை பாடங்களில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.
வயது:
30க்குள்.
5. Senior Welfare Officer - for GAIL, Vijaipur, Madhyapradesh:
1 இடம் (ஒபிசி).
சம்பளம்:
ரூ.24,900 - 50,500.
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சமூக அறிவியல் பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை பட்டம் அல்லது சமூக அறிவியல் பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன்அனுபவம்.
வயது:
30க்குள்.
6. Officer (Official Language):
3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.
தகுதி:
60% தேர்ச்சியுடன் இந்தி இலக்கியத்தில் முழு நேர முதுநிலை பட்டம். பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
வயது:
35க்குள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
7. Junior Superintendent (Official Language):
2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1).
சம்பளம்:
ரூ.14,500 - 36,000.
தகுதி:
இந்தி இலக்கியத்தில் 55% தேர்ச்சியுடன் முழுநேர மூன்றாண்டு பட்டப்படிப்பு அல்லது இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கோ அல்லது ஆங்கிலத்திலிருந்து இந்திக்கோ மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
வயது:
32க்குள்.
வயது வரம்பு 2.5.2016 தேதிப்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan, 16, Bhikaiji,
Cama place, R.K. Puram,
NEWDELHI- 110 066.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 12.5.16.
Post a Comment