A+ A-

கோழிக்குருமா செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Kuruma :

கோழிக்குருமா செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Kuruma :


கோழிக்குருமா :


தேவையானவை:


1. கோழிக்கறி -1 கிலோ

2. மல்லி -2 ஸ்பூன்

3. இஞ்சி -2 அங்குலம்

4. மிளகாய் -15

5. பூண்டு -2

6. ஏலக்காய் -8

7. கிராம்பு -10

8. வெங்காயம் -30

9. பட்டை -1

10. கசகசா -2 ஸ்பூன்

11. முந்திரிப்பருப்பு 2

12. தேங்காய் -1



செய்முறை:


1. 1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

2. கசகசா, முந்திரிப்பருப்பு, இஞ்சி,மல்லி ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

3. தேங்காய் துருவி பால் எடுத்து கொள்ளவும்.

4. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

5. அடி கனமான பாத்திரத்தில் பட்டை .கிராம்பு, ஏலக்காய் ,வெங்காயம்,பூண்டு,மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

6. அதனுடன் கோழிக்கறியை போட்டு வதக்கவும்.

7. வதங்கிய பின்பு தேங்காய் பாலை ஊற்றி, தேவையான உப்பு போட்டு,அரைத்த மசாலாவையும் சேர்த்து கொதிக்க விடவும்.

8. கொதித்த பின் மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்து, குருமா கெட்டியான பின் இறக்கவும்.