A+ A-

'டைம்' இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்

Time

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில் செல்வாக்கான 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடிக்கு இப்பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

இந்த வருடத்திற்கான மிகவும் புகழ்பெற்ற 100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின் டைம் நாளிதழல் வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு இப்பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் சூக்கர்பர்க், ஆங்சான் சூகி, பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன், ஆலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் இடம்பெற்றுள்ளார். ரகுராம் ராஜனை 'பொருளாதார தீர்க்கதரிசி' என்று வர்ணித்துள்ள டைம் நாளிதழ், உலக பொருளாதார பின்னடைவை முன்கூட்டியே கணித்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.