A+ A-

உலர் திராட்சை அல்வா

தேவையான பொருட்கள் :


  1. உலர் திராட்சை – 300 கிராம்
  2. சோள மாவு – 100 கிராம்
  3. சர்க்கரை – 400 கிராம்
  4. முந்திரி – 10
  5. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
  6. நெய் – 200 கிராம்
  7. ஆரஞ்ச் ரெட் – 1 சிட்டிகை
  8. பால் – 1 டீஸ்பூன்

செய்முறை :


  • உலர் திராட்சைப் பழத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் ஊறவைத்த பழத்தைச் சுத்தம் செய்து, ஒன்றுக்கு இரண்டாக அரைத்துக் கொள்ளவும். 
  • சோள மாவை நீரில் கரைத்துக் கொள்ளவும். 
  • ஆரஞ்ச் ரெட் கலரை சூடான பாலில் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். 
  • ஒரு வாணலியில் நெய்விட்டு முந்திரி, சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், அரைத்துவைத்துள்ள உலர் திராட்சைப் பழத்தைப் போட்டுக் கிளறவும். 
  • பின் கெட்டித்தன்மை அடைய, கரைத்து வைத்துள்ள சோள மாவைத் தண்ணீர் சேர்த்துக் கிளறி, நெய் மற்றும் ஏலத்தூள் போட்டு, அல்வா பதம் வந்தபின், ஆரெஞ்ச் நெட் கலரை ஊற்றி இறக்கவும்


[featured]

உலர் திராட்சைப் பழத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் ஊறவைத்த பழத்தைச் சுத்தம் செய்து, ஒன்றுக்கு இரண்டாக அரைத்துக் கொள்ளவும். சோள மாவை நீரில் கரைத்துக் கொள்ளவும். ஆரஞ்ச் ரெட் கலரை சூடான பாலில் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய்விட்டு முந்திரி, சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், அரைத்துவைத்துள்ள உலர் திராட்சைப் பழத்தைப் போட்டுக் கிளறவும். பின் கெட்டித்தன்மை அடைய, கரைத்து வைத்துள்ள சோள மாவைத் தண்ணீர் சேர்த்துக் கிளறி, நெய் மற்றும் ஏலத்தூள் போட்டு, அல்வா பதம் வந்தபின், ஆரெஞ்ச் நெட் கலரை ஊற்றி இறக்கவும்.