A+ A-

தேங்காய்ப் பால் கஞ்சி

தேவையான பொருட்கள்  :

  1. பச்சரிசி - 1 கப் 
  2. பூண்டு - 10 பல் 
  3. வெந்தயம் - 1 தேக்கரண்டி 
  4. தேங்காய் - அரை மூடி. 
  5. ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சர்க்கரை

 செய்முறை  :

  • ஒரு குக்கரில் பச்சரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும். 
  • தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். 
  • சாதத்தை நன்கு மசித்து அதனுடன் தேங்காய் பாலை சேர்த்துக் கலந்து, ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சீனி சேர்க்கவும். தேங்காய்ப்பால் கஞ்சி தயார்.
  • காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் பருகி வந்தால் வாய்ப்புண்ணும் வயிற்றுப்புண்ணும் மறைந்து விடும். 

[featured]

ஒரு குக்கரில் பச்சரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். சாதத்தை நன்கு மசித்து அதனுடன் தேங்காய் பாலை சேர்த்துக் கலந்து, ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சீனி சேர்க்கவும். தேங்காய்ப்பால் கஞ்சி தயார். காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் பருகி வந்தால் வாய்ப்புண்ணும் வயிற்றுப்புண்ணும் மறைந்து விடும்.