A+ A-

பலாபழப் பாயாசம்

தேவையான பொருட்கள்  :

  1. பலாப்பழம் – 20 
  2. தேங்காய் பால் – 2 கப் 
  3. வெல்லம் – 150 கிராம் 
  4. ஏலக்காய் – 6 
  5. முந்திரி – 5 
  6. பிஸ்தா – 5 
  7. நெய் – 2 டீஸ்பூன் 

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்துக் கொள்ளவும். 
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு பாகு எடுத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
  • ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகைஊற்றி ஒரு கொதிநிலை வந்ததும் மசித்து வைத்த பலா சுளைகளைப்போட்டு அதன்பின் ஏலத்தூள், தயாரித்து வைத்துள்ள முதல் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிநிலை வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பிஸ்தா தூவி இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து பரிமாறவும்.


[featured]

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு பாகு எடுத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகைஊற்றி ஒரு கொதிநிலை வந்ததும் மசித்து வைத்த பலா சுளைகளைப்போட்டு அதன்பின் ஏலத்தூள், தயாரித்து வைத்துள்ள முதல் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிநிலை வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பிஸ்தா தூவி இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து பரிமாறவும்.