A+ A-

ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் இன்னல்களைக்குறைக்க பரிகாரங்கள்

சனிபகவான்


ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் இன்னல்களைக்குறைக்க பரிகாரங்கள் உள்ளன. பரிகாரங்களை செய்து பலன் பெற்றபின் ஏழரைச் சனி நீங்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற வினா எழுகிறது.

நீங்கும்போது அந்தந்த ராசிக்காரர்கள் புண்ணிய நதிகள் சமுத்திரம், குளம் போன்றவற்றில் குளிக்கவும். சமுத்திரத்தில் நீராடுபவர்கள் தலையில் நல்லெண்ணெய் வைத்துக் குளிப்பது சிறப்பு. பிறகு புத்தாடை அணிய வேண்டும். குலவழிபாடு செய்தபின் அவசியம் சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் வேத விற்பன்னர்களை வைத்து நவகிரக சூக்தம் ஜெபம் பண்ணலாம். இயலாதவர்கள் நவகிரக ஸ்லோகங்களைக் கூறலாம். குறிப்பாக முதலில் சனீஸ்வரபகவானின் ஸ்லோகம் சொல்லி பிறகு முதலில் இருந்து நவகிரக ஸ்லோகம் சொல்லலாம்.

வீட்டை சுத்தமாக மெழுகி காசு, பணம், நகை பழங்களை சுவாமி அறையில் வைத்து கண்ணால் பார்க்க வேண்டும். பழைய ஆடைகள் சிலவற்றை ஏழைகளுக்கு தானம் பண்ணலாம். அன்னதானம் அவசியம். பசுவிற்கு அகத்திக்கீரை தரவும் இவற்றை பகவான் நீங்கும் காலத்தில் செய்வது விசேஷம். இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் செய்யலாம். அதையும் தவற விட்டுவிட்டால் ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம். இப்படிச் செய்தால் சனீஸ்வர பகவானின் ஆட்சியில் சிக்கிய மனித சரீரம் பற்பல நலமும் வளமும் விளையும் புனித பூமியாக மாறும். கஷ்டங்கள் மறையும் கவலைகள் குறையும் களிப்பு உறையும்.

புஷ்பாஞ்சலி,

வன்னி புஷ்பம் நீலோற்பவ மலர் சனிபகவானுக்கு விருப்பமானது என்பதால் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு சார்த்தலாம் கறுப்பு நிற வஸ்திரம் அணிவித்தும் வணங்கலாம்.

தீபாஞ்சலி,

நல்லெண்ணெய் நெய், இலுப்பை எண்ணெயிலிருந்து ஓர் இரும்புச் சட்டியின் வெள்ளை, கறுப்பு சிவப்பு வண்ண நூல்களை திரியாக இட்டு மேற்குதிக்கில் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். முக்கூட்டு எண்ணெய் சனீஸ்வர தீபம் என்று இதற்கு பெயர். இதனை ஏற்றி நீலோற்பவ மலர் நீலசங்கு புஷ்பம், வன்னி இலை, வில்வ இலைகளால் பூஜித்து சனிபகவானை சந்தோஷபடுத்தலாம். இந்த தீபமானது வீட்டின் நிரந்தரமான பிரகாசத்துக்கும் குறிப்பான இந்த தீபத்தினை மேற்கு திக்கில் வைத்து எரிய விட வேண்டும்.

தானங்கள்,

தினசரி காக்கைக்கு அன்னமிடல், ஏழைகளுக்கு தினசரி அன்னமிடல், ஊனமுற்றோருக்கு உதவுதல், கருப்புத்துணி கறுப்புக் கரை போட்ட வேட்டி வழங்குதல், நல்லெண்ணெய் தீபம் ஏற்றல் சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெயினால் சனிபகவான் திருமுன் விளக்கேற்றுதல் போன்றவை.

விதிகள்,

பழைய காலணிகளை தைத்து அணியக் கூடாது பழைய காலணிகளை யாருக்கும் தானம் தரக்கூடாது. புதிதாக வாங்கிக் கொடுக்கலாம். நல்லெண்ணெயை கடன் வாங்கி அதில் குளிக்க கூடாது. சனி நீங்கும் காலத்தில் ஓர் இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி தன் முகத்தைப் பார்த்துவிட்டு எண்ணெயுடன் அதனை தானமாக தந்துவிட வேண்டும்.கருப்பு எள் முடிந்த துணியை தக்க தாம்பூல தட்சணையுடன் தானம் அளிக்க வேண்டும். அவர் கறுப்பு நிறமுடையவராக இருக்க வேண்டும். யவை என்ற தானிய நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். இதை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து சனிக்கிழமையன்று தானம் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கல் வைத்து சூடாக தலைவாழையில் வறியவருக்கு வழங்கலாம். சனிபகவானின் திவ்ய க்ஷேத்திரமான திருநள்ளாறு சென்று அங்குள்ள சக்தி வாய்ந்த தீர்த்தத்தில் மூழ்கி இயன்றளவு சாந்தி பரிகாரங்கள் செய்து சனிபகவானை மனமுருகி வழிபடலாம். இதுவரை சொன்னவற்றில் நமக்கு உகந்தவற்றை செய்து கொள்ளாம்.

சனிபகவான் காயத்ரி மந்திரத்தை மறக்கக்கூடாது,


காகத் வஜாய வித்மஹே
கட்சு ஹஸ்தாய தீமஹே
தந்நோ மந்தப் பிரஜோதயார்த்

ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் இன்னல்களைக்குறைக்க பரிகாரங்கள் உள்ளன. பரிகாரங்களை செய்து பலன் பெற்றபின் ஏழரைச் சனி நீங்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற வினா எழுகிறது.