A+ A-

அமாவாசையில் பிறந்தால் திருடர்களாக இருப்பார்களா?

இறை நம்பிக்கை இருந்தால், அதி‌ல் அவ‌ர்கள் த‌ன்னை‌த் தானே இறை‌த் தூதனாக அ‌றி‌வி‌த்து‌க் கொ‌ள்ளுபவ‌ர்கள். அர‌சிய‌லி‌ல் தானைத் தலைவன், பஜாரில் இரு‌ந்தா‌ல் த‌னது கடையை முத‌லாக வை‌த்‌திரு‌ப்ப‌ர்.
 
பகலில் பிறந்தால் கொஞ்சம் கஞ்சம், இரவில் பிறந்தால் ஈகை குணம் மிக்கவர்களாகவும் இருப்பர். இது ஆரா‌ய்‌ச்‌சி‌‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது, இத‌ற்கு ச‌ந்‌திர‌னி‌ன் ஆ‌தி‌க்கமே‌ காரண‌ம்.

இறுக்கமான மன நிலை உடையவர்களாக இருப்பர், அழுதா‌ல் தேம்பித் தேம்பி அழுவர், அதுவும் குறைச்சல்தான். ‌அ‌தீத ப‌ற்றுடையவ‌ர். அடக்க முடியாமல்
அதிகமான பற்று உடையவர், அதீத பற்று, யதார்த்தவாதி, மூடத்தனத்தை வெறுப்பவர், ஆறாவது அறிவுக்கு அதிக வேலை, தன்னைச் சுற்றி இருப்பவர்களை அதிகமாக வளருவதை விரும்பாதவர்கள். அ‌தி‌‌ல் அ‌திக அ‌க்கறை கா‌ட்டுவவார்கள். மரியாதையை விரும்பாதவர்களாக இருப்பது போன்று காட்டிக் கொள்பவர், ஆனால் அப்படி அவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். எதை அதிகம் விரும்புகிறார்களோ அதனை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
 
இதில் இரவில் பிறந்தால் வித்தியாசமாக இரு‌ப்ப‌ர். ம‌ற்றவ‌ர்களு‌க்கு சவால் விடுபவர், உணர்ச்சி வய‌ப்படுபவ‌ராக இரு‌ப்ப‌ர். பகலில் பிறந்தவர்களாக இருந்தால் மனதிற்குள்ளேயே சவா‌ல் விடுபவராக இரு‌ப்ப‌ர்.
 
அமாவாசையில் பிறந்தவர்களுக்கு பில்லி சூன்யம் வைக்க முடியாது, எந்த மாந்‌த்ரீகமும் அவர்களை ஒன்றும் செய்யாது. மேலும், ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும். அதாவது,
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.
 
ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திரு‌ந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள். கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
 
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும், வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.
 
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் கொபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

இறை நம்பிக்கை இருந்தால், அதி‌ல் அவ‌ர்கள் த‌ன்னை‌த் தானே இறை‌த் தூதனாக அ‌றி‌வி‌த்து‌க் கொ‌ள்ளுபவ‌ர்கள். அர‌சிய‌லி‌ல் தானைத் தலைவன், பஜாரில் இரு‌ந்தா‌ல் த‌னது கடையை முத‌லாக வை‌த்‌திரு‌ப்ப‌ர்.