A+ A-

4ஜி மொபைல் போன்களின் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் 3000 ரூபாய்க்கும் கீழ் குறையும்

 
4g phone
இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் அளிக்கும் 4ஜி சேவையை ஏர்டெல் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வோடபோன், ஐடியா, உள்ளிட்ட நிறுவனங்களும் தொடர்கின்றன. 
 
இன்னிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் 4ஜி ஸ்மார்ட் ஃபோன்களின் தேவை அதிகரித்து வருகிறது. முன்னனி நிறுவனங்களும் பல்வேறு வசதிகளுடன் 4ஜி மொபைல் போன்களை போட்டி போட்டு உற்பத்தி செய்து வருகின்றன. இதன் காரணமாக அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கும் 4ஜி மொபைல் போன்களின் விலை, ஆண்டு இறுதிக்குள் 3000 ரூபாய்க்கும் கீழ் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவைச் சேர்ந்த பிக்காம் என்ற நிறுவனம், 3,999 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட் ஃபோனை இந்த வாரம் அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியாக மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் 4ஜி ஸ்மார்ட் ஃபோன்களை குறைந்த விலைக்கு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 4ஜி ஸ்மார்ட் ஃபோன்களின் விலை இந்தியாவில் 120 டாலர் (8 ஆயிரம் ரூபாய்) என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி மொபைல் போனின் விலை 40 டாலராக( 2700 ரூபாய்) சரியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

reliance 4g

இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் அளிக்கும் 4ஜி சேவையை ஏர்டெல் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வோடபோன், ஐடியா, உள்ளிட்ட நிறுவனங்களும் தொடர்கின்றன.