A+ A-

கோழி றோஸ்ட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Roast :

கோழி றோஸ்ட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Roast :


கோழி றோஸ்ட் - Chicken Roast :

தேவை :


1. கோழி -1/2 கிலோ

2. இஞ்சி ,பூண்டு,உப்பு - சிறிதளவு

3. தேங்காய் எண்ணெய் -50 கிராம்

4. எலுமிச்சம்பழம் -1

5. மிளகாய்தூள் -1 கரண்டி

6. சிவப்பு கலர் பவுடர் - சிறிதளவு

7. தயிர் -2 டீஸ்பூன்

8. நெய் -50 கிராம்

செய்முறை :


1. தோல் நீக்கிய கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

2. தயிரில் கோழித்துண்டு,தட்டிய பூண்டு,இஞ்சி . கலர் பவுடர், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் போட்டு எண்ணெய் மிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் குக்கரில் லேசாக வேக வைக்கவும்.

3. கோழி துண்டுகளை தனியே எடுத்து சாறை வற்ற வைக்கவும்.வெந்த கோழித் துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

4. சுவையான கோழி றோஸ்ட் ரெடி.