A+ A-

சிக்கன் ஸ்டஃப் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Stuff :

சிக்கன் ஸ்டஃப் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Stuff :

சிக்கன் ஸ்டஃப் - Chicken Stuff :

தேவையானவை:


1. .கோதுமை மாவு -100 கிராம்

2. முட்டை -2

3. கொத்திய எலும்பு நீக்கிய கறி -100 கிராம்

4. சோயா சாஸ் -1/4 ஸ்பூன்

5. அஜினோ மோடா -1/4 ஸ்பூன்

6. எண்ணெய் -100 மில்லி

7. உப்பு தேவையான அளவு..

செய்முறை:


1. கோதுமை மாவில் முட்டையை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

2. இதன் கனம் 2 மில்லி மீட்டர் உடையதாக இருக்க வேண்டும்.

3. பின்பு இந்த சப்பத்தியை சதுரம் ஆக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

4. கோழிக்கறியுடன் அஜினோ மோடா, சோயா சாஸ் ,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

5. ஒவ்வொரு சப்பாத்தி சதுரத்தின் மீதும் கொஞ்சம் கோழிக்கறி கலவையை கவைத்து முக்கோண வடிவமாக மடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகபொரித்து எடுக்கவும்.