A+ A-

எக் பிரட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Egg Bread Toast :

எக் பிரட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Egg Bread Toast :

எக் பிரட் - Egg Bread Toast :

தேவையானவை:


1. ரொட்டி துண்டு -5 எண்ணம்

2. முட்டை -3

3. மிளகுதூள் -2 ஸ்பூன்

4. எண்ணெய் -50 மி.லி

5. உப்பு –தேவையானது

6. பொரிகடலை -50 கிராம்

7. வெண்ணிலா எசன்ஸ் -1 ஸ்பூன்

செய்முறை:


1. முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் பொரிகடலை மாவு, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

2. உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.

3. தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயை ஊற்றி முட்டை கலவையை தோசையாக ஊற்றவும்.

4. அதன் மேல் ரொட்டி துண்டை வைத்து முட்டை தோசையை மடித்து ரொட்டி துண்டு வெளியில் தெரியாதபடி செய்யவும்.

5. திருப்பி வைத்து பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.