A+ A-

முட்டை குழம்பு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Egg Kulambu :

முட்டை குழம்பு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Egg Kulambu :

முட்டை குழம்பு - Egg Kulambu :

தேவையானவை:


1. முட்டை -4

2. தேங்காய் பால் -3 டம்ளர்

3. பச்சை மிளகாய் -4

4. வெங்காயம் -100 கிராம்

5. மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

6. எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்

7. பூண்டு -4 பல்

8. கறிவேப்பிலை – 1 கொத்து

9. உப்பு –தேவையான அளவு

10. சோம்பு -1 ஸ்பூன்

11. எண்ணெய் –தேவையான அளவு

செய்முறை:


1. முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு,கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

3. மஞ்சள் தூள் , நறுக்கிய மிளகாய், பூண்டு சேர்த்து கிளறி 1 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவும்.

4. இக்கலவையை நன்கு கொதிக்க விடவும்

5. .இதனுடன் முட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீதமுள்ள தேங்காய் பால்,எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும்.