A+ A-

முந்திரி கச்சோரி

முந்திரி கச்சோரி

தேவையான பொருட்கள் :

  1. மைதா - கால் கிலோ
  2. பொடித்த சர்க்கரை - ஒரு கப்
  3. பொடித்த முந்திரி - ஒரு கப்
  4. ஃபுட் கலர் (ஆரஞ்சு) - சில துளிகள்
  5. ரிஃபைண்டு ஆயில் - 300 கிராம்,
  6. பால் பவுடர் ஒரு கப்
  7. பாதாம் எசென்ஸ் - சில துளிகள்
  8. கண்டென்ஸ்டு மில்க் - இரண்டு டேபிள்ஸ்பூன்

செய்முறை :

  • பால் பவுடர், பொடித்த சர்க்கரை, பாதாம் எசென்ஸ், பொடித்த முந்திரி, சிறிது ஆரஞ்சு நிறம் ஆகியவற்றை நன்கு கலந்து கொண்டு கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துப் பிசிறியது போல் கலக்கவும்.
  • மைதாவை சிறிது ரிஃபைண்டு ஆயில், ஆரஞ்சு கலர், தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும், மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லியதாக பூரி செய்து, பால் பவுடர் கலவையை பரப்பி அதன்மீது இன்னொரு பூரி வைத்து ஓரங்களை நன்றாகத் தண்ணீர் தொட்டு அழகாக பின்னல் போல முறுக்கி விடவும்.
  • ரிஃபைண்டு ஆயிலை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பொரித்தால்.. கச்சோரி ரெடி!

குறிப்பு

அதிக இனிப்பு வேண்டுவோர் அரை கிலோ சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதில் ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும். பொரித்த கச்சோரிகளை சூடான பாகில் முக்கி எடுத்துப் பரிமாறவும்.

பால் பவுடர், பொடித்த சர்க்கரை, பாதாம் எசென்ஸ், பொடித்த முந்திரி, சிறிது ஆரஞ்சு நிறம் ஆகியவற்றை நன்கு கலந்து கொண்டு கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துப் பிசிறியது போல் கலக்கவும். மைதாவை சிறிது ரிஃபைண்டு ஆயில், ஆரஞ்சு கலர், தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும், மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லியதாக பூரி செய்து, பால் பவுடர் கலவையை பரப்பி அதன்மீது இன்னொரு பூரி வைத்து ஓரங்களை நன்றாகத் தண்ணீர் தொட்டு அழகாக பின்னல் போல முறுக்கி விடவும். ரிஃபைண்டு ஆயிலை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பொரித்தால்.. கச்சோரி ரெடி!