A+ A-

அன்னாசிப்பழ கீர்

அன்னாசிப்பழ கீர்

தேவையான பொருட்கள் :

  1. அன்னாசி பழம் - 1/2
  2. ரவை - 100 கிராம்
  3. சர்க்கரை - 150 கிராம்
  4. குங்குமப் பூ - ஒரு சிட்டிகை
  5. பால் - 1/2 லிட்டர்
  6. நெய் - 2 டீஸ்பூன்
  7. வெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
  8. முந்திரி - 10
  9. பாதாம் - 5

செய்முறை :

  • நெய்யில் ரவையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • சூடான பாலில் குங்குமப் பூவை கரைத்து வைக்வும்.
  • அன்னாசிப் பழத்தை சிறுசிறு துண்டாக நறுக்கவும்.
  • முந்திரியையும், சுடுதண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்த பருப்பையும் நன்றாக துருவி ஒரு பாத்திரத்தில் வெண்ணெயில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் பாலைக் கொதிக்கவிடவும்.
  • கொதித்தபின்னர் வறுத்த ரவையைச் சேர்த்து கிளறவும்.
  • அதன்பின் தேவையான சர்க்கரையை சேர்த்துப் பதம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள குங்கும பூவை ஊற்றவும்.
  • அத்துடன் சிறிதளவு நெய் மற்றும் துண்டுகளாக நறுக்கிய அன்னாசி பழம் சேர்த்து கிளறி ஒரு நிமிடத்திற்குப் பின் வறுத்த முந்திரி, பாதாம் தூவி பறிமாறவும்.

நெய்யில் ரவையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சூடான பாலில் குங்குமப் பூவை கரைத்து வைக்வும். அன்னாசிப் பழத்தை சிறுசிறு துண்டாக நறுக்கவும். முந்திரியையும், சுடுதண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்த பருப்பையும் நன்றாக துருவி ஒரு பாத்திரத்தில் வெண்ணெயில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் பாலைக் கொதிக்கவிடவும். கொதித்தபின்னர் வறுத்த ரவையைச் சேர்த்து கிளறவும். அதன்பின் தேவையான சர்க்கரையை சேர்த்துப் பதம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள குங்கும பூவை ஊற்றவும். அத்துடன் சிறிதளவு நெய் மற்றும் துண்டுகளாக நறுக்கிய அன்னாசி பழம் சேர்த்து கிளறி ஒரு நிமிடத்திற்குப் பின் வறுத்த முந்திரி, பாதாம் தூவி பறிமாறவும்.