A+ A-

ரோஸ் ரசகுல்லா

தேவையான பொருட்கள் :

  1. பால் - 2 லிட்டர்
  2. வெள்ளை வினிகர் - 2 டீஸ்பூன்
  3. ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
  4. ராஸ்பெரி கலர்
  5. சர்க்கரை 250 கிராம்
  6. குல்கந்த் - 100 கிராம்

செய்முறை :

  • பாலை நன்றாக சுண்டக் காயும் அளவு கொதிக்க வைத்த பின் அதில் இரண்டு துளி வெள்ளை வினிகர் சேர்க்கவும். உடனே பால் திரிய ஆரம்பிக்கும். நன்றாகத் திரிந்தபின் தண்ணீரை வடித்துக் கெட்டியான பன்னீரை எடுத்துக் கொள்ளவும்.
  • கெட்டியான பன்னீரில் ராஸ்பெரி கலர் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  • உருண்டையின் நடுவே குல்கந்த் வைத்துப் பிடித்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு தேவையான சர்க்கரை போட்டு கொதித்து வந்தவுடன் ரோஸ் வாட்டர் இரண்டு தேக்கரண்டி சேர்க்கவும்.
  • பின்னர் பிடித்த உருண்டையை வாணலியில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு பரிமாறும் போது குங்கும பூ தூவி பறிமாறவும். கண்ணைக் கவரும் ரோஸ் ரஸகுல்லா ரெடி!



[featured]

பாலை நன்றாக சுண்டக் காயும் அளவு கொதிக்க வைத்த பின் அதில் இரண்டு துளி வெள்ளை வினிகர் சேர்க்கவும். உடனே பால் திரிய ஆரம்பிக்கும். நன்றாகத் திரிந்தபின் தண்ணீரை வடித்துக் கெட்டியான பன்னீரை எடுத்துக் கொள்ளவும். கெட்டியான பன்னீரில் ராஸ்பெரி கலர் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும். உருண்டையின் நடுவே குல்கந்த் வைத்துப் பிடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு தேவையான சர்க்கரை போட்டு கொதித்து வந்தவுடன் ரோஸ் வாட்டர் இரண்டு தேக்கரண்டி சேர்க்கவும். பின்னர் பிடித்த உருண்டையை வாணலியில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு பரிமாறும் போது குங்கும பூ தூவி பறிமாறவும். கண்ணைக் கவரும் ரோஸ் ரஸகுல்லா ரெடி!