A+ A-

ஆப்பிள் ஜிலேபி

தேவையான பொருட்கள் :

  1. பச்சை ஆப்பிள் - 2
  2. ஈஸ்ட் - 50 கிராம்
  3. மைதா - 100 கிராம்
  4. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
  6. எலுமிச்சை பழம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

  • பச்சை நிற ஆப்பிளை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் வெந்நீரில் ஈஸ்ட் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் மைதா, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • கரைத்த ஈஸ்ட் மற்றும் ஊறிய மைதா இரண்டையும் கலந்து அதனுள் வட்டமாக நறுக்கிய ஆப்பிளை முக்கி 30 நிமிடம் வைக்கவும்.
  • பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஆப்பிள் துண்டுகளை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தேவையான சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை விட்டு, பின்னர் ஒரு துளி எலுமிச்சை சாறு விட்டு உடனே இறக்கவும்.
  • இறக்கிய சர்க்கரை பாகில் வறுத்த ஆப்பிள் துண்டுகளை போட்டு மேலே குங்கும பூ தூள் தூவி பரிமாறவும். 
 
[featured] 
 

தேவையான பொருட்கள் பச்சை ஆப்பிள் - 2 ஈஸ்ட் - 50 கிராம் மைதா - 100 கிராம் எண்ணெய் - 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் - 1/2 டீஸ்பூன் செய்முறை பச்சை நிற ஆப்பிளை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் வெந்நீரில் ஈஸ்ட் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு கப் மைதா, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். கரைத்த ஈஸ்ட் மற்றும் ஊறிய மைதா இரண்டையும் கலந்து அதனுள் வட்டமாக நறுக்கிய ஆப்பிளை முக்கி 30 நிமிடம் வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஆப்பிள் துண்டுகளை வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தேவையான சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை விட்டு, பின்னர் ஒரு துளி எலுமிச்சை சாறு விட்டு உடனே இறக்கவும். இறக்கிய சர்க்கரை பாகில் வறுத்த ஆப்பிள் துண்டுகளை போட்டு மேலே குங்கும பூ தூள் தூவி பரிமாறவும்.